உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தொல்காப்பியர் காலம்

“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே" (1034)

259

என்று கூறுகிறார். கடவுட் கோட்பாடு அருகநெறியர் கொள்வது அன்று.

இவ்வாறு அடிமூலக் கொள்கையிலேயே அருக நெறிக்கும் தொல்காப்பியத் தமிழ் நெறிக்கும் வேறுபாடு உண்மையை உணர்வார் தொல்காப்பியரை அருகர் எனச் சொல்லார். அவர் சைவர், வைணவர் எனவும் சொல்லார். ஏனெனில், அவர் நாளில் இச்சமயங்கள் தோன்றின அல்ல. சிவனார் வழிபாடும், திருமாலார் வழிபாடும்,அம்மை வழிபாடும் தொன்மையன என்பது அறியச் சான்றுகள் பலப்பல உண்டாயினும், அவ்வழி பாடுகள் சமயப் பெயர் பெற்றவை அல்ல! மெய்கண்டார் தோற்றத்தின் பின்னரே சிவனிய மெய்ப்பொருள் நூல் வாய்க்கின்றது. மெய்கண்ட பரம்பரையும் உண்டாகின்றது. தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம், இறையருட் செல்வர்கள் படைப்பு ஆயவை கொண்டு வகுக்கப்பட்டதே சைவ சமயம் ஆயிற்றாம், அதன் பொருள் நூல் முதல் நூல் - சிவஞான போதமேயாம்.

தமிழர் சமயம்

சமணம் தமிழகச் சமயமன்று; தமிழர்களால் ஏற்கப்பட்டும், பங்களிப்புச் செய்யப்பட்டும் இருப்பினும் தமிழகத்துக் கிளர்ந்த தமிழர் சமயமன்று. பாகத மொழி வழியது அது. வடமொழி வரவுக்கு முற்பட்டதேனும், அதற்குக் கொண்டு கொடுத்தும் தழுவிக் கொண்டது. அதன் சமயச் சொற்களே தமிழுக்குரிய தல்லாத அயற்சமய நெறியது என்பதைக் காட்டுவனவாம்.

தமிழர் சமயங்களும் கூடத் தம் மெய்யியற் சொற்களை அயன்மொழி வழியே ஆக்கியும் ஆக்க இடந்தந்தும் இன்றும் முற்றாக விலக்க முடியா நிலையில் இருப்பதும் வடமொழியே வழிபாட்டு மொழி, தெய்வ மொழி என்பதற்கு ஒரு காரணமாம். வழக்கு

தொல்காப்பியம்

அயல்வழக்குத் தழுவாத் தழுவாத் தமிழ் வழக்குடையது என்பது தொடக்க முதல் இறுவாய் வரை கடைப்பிடியாகக் கொண்டு இயற்றப்பட்டமையால் தான் தொல்காப்பியப் பாயிரம் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து, வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்