உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி என்ற அளவில் அமையாமல் "செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோடு முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்தேன்” என்றும் அழுத்த மாகக் கூறியது.

66

'கரணத்தின் அமைந்து முடிந்த காலை” (5)

என்னும் கற்பியல் நூற்பாவை வடவர் நெறிக்கு வலிந்து இழுத்துச் சென்று, தமிழ்ப் பரப்பில் அந்நெறிக்குச் சான்று காணாராய்த் தமிழ் நெறிக்கரணத்தையே எடுத்துக் காட்டும் நச்சினார்க்கினியர், "காலம் உலகம் உயிரே உடம்பே” (58)

என்னும் கிளவியாக்க நூற்பாவுக்கு உரையெழுதுங்கால்,

"காலம் உலகம் என்பன வடசொல் அன்று; ஆசிரியர் வட சொற்களை எடுத்தோதி இலக்கணம் கூறார் ஆகலின் என, தேர்ந்த தெளிவுரை வழங்குதல் கொண்டு தொல்காப்பியத் தமிழ்ம்மை விளக்கமாம்.

இன்மைக் கொள்கை

வேதங்களையும் அவற்றைத் தழுவியவரையும் எதிர்த்த மதங்களுள் குறிப்பிடத்தக்கவை. சார்வாகம், சைனம், பௌத்தம் என்பன. இம்மதத்தார், ஒரு தனிக்கடவுளையோ அக்கடவுனின் ஏற்றத்தையோ நம்பாதவர்கள். மேலும், வேதங்கள் கூறும் சமயச் சடங்குகள் மக்களை உய்விக்க மாட்டா என்பவர்கள் என்பர். (தமிழகத்தில் ஆசீவகர்கள் பக்.6)

அணுக்கொள்கை

சார்வாக மதத்தார் ஆசீவகர் எனப்படுவர். ஆசீவகர், சமணர், பௌத்தர் ஆகிய மூவரும் அணுக்கொள்கையர், உலகப் பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை என்பர். அணுக்களுக்கு அழிவு இல்லை; தோற்றமும் இல்லை என்பர். அவ்வணுத்திரளே 'ஒலி' என்பது அவர்கள் கொள்கை. ஆதலால் பவணத்தியராகிய சமணர் இயற்றிய நன்னூலில்,

“மொழி முதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்தது முதல் சார்பு என இரு வகைத்தே’

என்கிறார். இவ்வணுக் கொள்கையராகவோ, குருவர் வழிபாட்டுக் கொள்கையராகவோ தொல்காப்பியரைச் சுட்டல் இயலாது.

“பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த

நான்முகற் றொழுது நன் கியம்புவன் எழுத்தே”

என்று தொடங்குவது போலவோ, மொழி முதற் காரணம் அணுத் திரள் ஒலி என்றோ கூறினார் அல்லர்.