உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

261

நூல் தொடக்கமே,

“எழுத்தெனப் படுப

அகர முதல னகர இறுவாய்

முப்ப ஃ தென்ப;

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே'

என்பதாம். ஆதலால் அணுக் கொள்கைச் சமயத்தார் எனின் அதனைக் கூறியிருப்பார். அன்றியும் தொல்காப்பியத்தில் 'அணு' என்னும் சொல்லே இடம் பெறவில்லை.

உலக மூலமாம் ஐம்பூத மயக்கத்தை,

நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலகம்

என்ற அவர், ஐந்து பூத மூலமாம் அணுவைச் சுட்டினார் அல்லர். சமணர் ஏற்காத கடவுள், தெய்வம் ஆகிய சொற்களையும் கூறுகிறார். ஆதலால், தொல்காப்பியர் சமணர் ஆகார். நிலையாமைக் கொள்கை

நிலையாமைக் கொள்கையில் மிக அழுத்தம் உடையவர் சமணர். தமிழ் நெறியாம் காஞ்சித் திணையின் இலக்கணத்தை,

66

பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே”

என்கிறது. அவர் கூறும் மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை முதல் காடு வாழ்த்து ஈறாக இருபாற்பட வகுத்த இருபது துறைகளும், அமர நிலையே; அஃது அழுகை நிலை அற்ற வீறு மிக்கவையாம்! அகத்திணை

அகத்திணை புறத்திணை என்பவை தமிழர் பொருள் நெறி கூறுவன. இப்பொருள்கள் இரண்டனுள் தொல்காப்பியர் அகத்திணைக்கே முன்மை கொடுத்ததுடன் களவியல், கற்பியல், பொருளியல் என மூன்று இயல்களை மேலும் வகுக்கிறார். புறத்திணை அத்தகு விரிவு பெற்றிலது. அவர் யாத்த முறையே முறையாய் பாட்டு தொகை நூல்களில் அகத்திணை மிக்கும் புறத்திணை சுருங்கியுமே உள்ளமை தமிழ் கற்றார் எவரும் அறிந்தது. தமிழ் என்பதே 'அகப்பொருள்' என்றும் 'களவியல்' என்றும் பெருமையொடு கூறல் நூன்மரபு ஆகியது. எழுத்து சொல் பெற்றும், பொருள் பெறாமை மற்றவை பெற்றிலேம்

/