உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

குறுதல் என்பது குற்றுதல்;

66

பவள உலக்கை கையால் பற்றித் தவள முத்தம் குறுவாள்"

என்றார் இளங்கோவடிகளார். குறுதல் அமைந்த நீர்ப் பெருக் குடைய இடம் குற்றாலம் என்க. குற்றுதலாவது, இடித்தல், மோதுதல், சாடுதல், பொங்குதல், வீங்குதல், தாவுதல், சவட்டுதல் முதலிய பொருள்களைத் தரும். நீர், கரையில் மோதுதலால் அதனை 'இடிகரை' என்பர். ஆதலால், நீரின் தன்மை குறுதல் என்பது தெளிக.

குற்றாலத்திற்கு வந்த ஆளுடைய பிள்ளையார், குற்றால நாதர்க்கும், அத் திருக்கோயில் மரமான 'குறும்பலா'வுக்கும் தனித் தனிப் பதிகம் பாடினார். குற்றாலம் என்பதைச் சொற்பொருள் விளங்கும் வகையில்,

“போதும் பொன்னும் உந்தி அருவி புடைசூழக்

கூதன் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்.

என்றார். இதனையும் பொதுமக்களும் புலமை மக்களும் ‘குத்தாலம்' ஆக்கிவிடா வண்ணம், நல்ல வேளையாகக் கல்லிலும் பொறித்துள்ளனர்! வாழ்க குற்றாலம்!

தஞ்சை நாட்டுக் குற்றாலத்திற்குத் 'துருத்தி' என்பதே பழம் பெயர். அதன் பொருள் உணர்ந்தோர், 'குற்றாலம்' என்னும் ஒரு சொல்லையும் அதற்குப் படைத்துக்கொண்டனர். அக் காரணம் நுனித்து அறியாதவர், அக் கோயில் திருமரமாகிய 'ஆத்தி' என்பது 'குத்தாலம்' ஆகலின் குத்தாலம் என்பதே பொருந்துவது என்றனர்.

“ஆரே தாதகி ஆத்தியாகும்"

என்று திவாகரமும்,

"தாதகி ஆத்தி ஆரே சல்லகி எல்லாம் ஒன்றும்'

என்று சூடாமணியும் ஆத்தியைக் குறிக்கும். இங்கே குத்தாலம் இல்லை! காட்டாத்திக்குக் 'குத்தாலம்' என்னும் பெயருண் மையை மருத்துவ அகரமுதலிகள் சுட்டும். இதனால் இது சுற்றி வளைத்துச் சொல்லிய பொருந்தாப் பொருத்தமாய் அமைந்தது.

திருக்குற்றாலத்தைப் பாடிய ஆளுடைய பிள்ளையார், இத் திருக்கோயிலைத் 'துருத்தி' என்றார். இறைவரைத் 'துருத்தி