உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல் இ

13

யுடையார்' என்றார். மெய்ப்பொருள் விளங்கும் வகையில் அவர் கூறியது, "பைம் பொழில் சூழ் வீங்குநீர்த் துருத்தியார்" என்பது இதனையே “வீங்குநீர்த் துருத்தியுடையார்" என்று கல்வெட்டும் குறிக்கின்றது. துருத்தி குற்றாலம் ஆகியது எவ்வாறு?

துருத்தி என்பது ஆற்றிடைக்குறை; அரங்கம், திட்டை, குறை என்பனவும் அதுவே. நீர்ப் பெருக்குச் சூழ்வர இடையே துருத்தி நிற்கும் மண் பகுதியே துருத்தி. நீர்மோதித் தாக்கும் இடம் ஆகலின், 'வீங்குநீர்த் துருத்தி ஆயிற்று! உந்தும் அருவி புடைசூழ்தலின் குற்றாலம் ஆயிற்று! இவண் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கத்தையும் கருதிப் பொருட் பொருத்தம் கண்டுகொள்க.

ஆலி-நீர்க்கட்டி, நீர்:

குளிர்ச்சி மிகுதியால் நீர், கட்டிபடுதல், உறைந்து பாறை யாதல் என்பவை கண்கூடு. சில போழ்துகளில் மழைத்துளியுடன் பனிக்கட்டிகளும் வீழ்வதுண்டு. அதனை 'ஆலங்கட்டி மழை' என்பர். நீர் கட்டியாதலை ஆலங்கட்டி என்றது சிறந்த தேர்ச்சி யாகும்.

9

ஆலங்கட்டியை இலக்கியம் 'ஆலி' என வழங்கும் ஆலி, இருப்பைப்பூ,மராஅம்பூ, ஈங்கைப்பூ, முத்து, கழங்கு ஆகிய வற்றுக்கு உவமையாகக் கூறப்பெற்றுள்ளது (அகம் 95, 125, 211, 282, 334). ஆலியின் தன்மை, "தண்மழை ஆலி' சூர்பனிப்பன்ன தண்வரல் ஆலி' 'ஆலியின் நிலந்தண்ணென்று கானங்குழைப்ப என்று குறிக்கப் பெற்றுள்ளது (அகம் 211, 304, 314). மழை பொழிதலைத்,

66

'துவலை பெயலை துளியே மாரி, உறைபெயல் ஆலி உதகம் சிதறி, தூவல் சீகரம் தூறல் வருடம்

எனத் திவாகரம் கூறும்.

"துளியும் நீர்கொள் ஆலங் கட்டியும்

மழையும் ஆலி எனவகுத் தனரே"

எனப் பிங்கலம் கூறும்.

ஆழ்வார்களுள் ஒருவராகிய திருமங்கை மன்னர் ஆட்சி புரிந்த நாடு 'ஆலி நாடு' எனப் பெற்றது. அவர் 'ஆலி நாடர்'