உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

எனப்பெற்றார். 'புனல் நாடு' எனப்பெறும் சோணாட்டுப் பகுதியே 'ஆலி நாடு' என்பதும், புனலும் ஆலியும் பொருளால் ஒன்றுபட்டவையே என்பதும் கருதுக. புனலூர், புனல்வேலி என ஊர்ப் பெயர்கள் உண்மையும் எண்ணுக.

இனி, 'ஆலி' என்பதோர் ஊர் சீகாழிக்கு அணித்தே உள்ளதும், அதற்குத் திருக்கோயில் சிறப்பு உள்ளதும், சிவனியமும் மாலியமும் போற்றும் அடியார் பெருமக்கள் அவ்வூரில் தோற்ற முற்றதும் கற்றோர் அறிவர். அது 'திருவாலி' என்பதாம்.

திருவாலி நீர்வளச் சிறப்பால் 'புனல் ஆலி' எனப் பாடுபுகழ் பெற்றது. பாடியவரும் ஆலி நாடாராம் திருமங்கை மன்னரே (திவ். 1211, 1212, 1214, 1217). அன்றியும் அதன் நீர்வளப் பெருக்கால், அந்தண் ஆலி" (1329) என்றும், “பல்பணையால் மலிந்து எங்கும் ஆடல் ஓசை அறா அணி ஆலி" (1192) என்றும் கூறப்பெறுகிறது.

66

திருவாலிக்குத் 'திருவாலிவயல்' என்பதொரு பெயர் (1200), 'வயலாலி' என்றும் அதனைக் கூறுவர் (1204). அவ் வயல் வளம் கெழும்,

tr

“தண்பணை சூழ் வயலாலி” (1210)

“வாவியந் தண்பணை சூழ் வயலாலி" (1216)

"மணிகெழுநீர் மருங்கு அலரும் வயலாலி" (1199)

“அணிநீலம் மடைநின் றலரும் வயலாலி" (2027) "அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி” (2674} “அள்ளல் அம்பூங் கழனி அணி ஆலி” (1208) என்றெல்லாம் விரித்துரைக்கப் பெற்றுள்ளது.

இத் திருவாலிக்குப் புகழ் சேர்க்கப் பிறந்த பெருமகனார் திருவாலியமுதனார் என்பார். அவர், திருவிசைப்பாப் பாடிய ஒன்பான் பெருமக்களுள் ஒருவர். அமுதனார் சிறந்தோங்கிய இடம் ஆலி ஆகலின் இப் பெயர் பெற்றார் என்பது தெளிவா வதுடன், ‘ஆலியே அமுதம்' என்பதும் இரட்டுறலால் விளங்கும்.

'வானின் றுலகம் வழங்கி வருதலால் தான மிழ்தம் என்றுணரற் பாற்று”

என்பது பொய்யாமொழி அன்றோ?