உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

திருவாலிப் பெருமாள், 'வயலாலி

15

மணவாளன்;

பெருமாட்டி 'அமிழ்த கடவல்லி'; ஆலியும் அமுதும் இணையும் காட்சி ஈது! ஆயின், 'ஆலம்' 'நஞ்சு' ஆகியவகை என்ன?

ஆலம்-நஞ்சு:

ஆல் என்பது நீர், நீர்க்கட்டி, முகில், மழை, மழைத்துளி எனப் பொருளால் விரிந்தமை அறிந்தோம். நீர்ப்பெருக்காம் பொய்கையும் ஆறும் சுனையும் மடுவும் கடலும் முகிலும் கொண்டலும் வானும் எந்நிறமாகக் காட்சி வழங்குகின்றன எனின், கருநிறமே-கருநீல நிறமே என எவரும் கூறுவர். நீருக்கு நிறமில்லை என அறிவியல் உலகம் மெய்ப்பிப்பினும், அந்நிறத் தோற்றம் உண்மை பொதுவில் அறிந்ததே!

நீருக்குப் பொதுவாய் அமைந்த இந் நிறத்தாலேயே நீல், நீள் என்னும் சொற்கள் உண்டாயின. அவ்வாறே நீர்ப்பெயர் சுட்டும் 'ஆல்' என்பதற்கும் ஆலம் என்னும் (கருமை என்னும்) பொருள் உண்டாயிற்றாம். நீல் 'நீலம்' ஆவது போல், 'ஆலம்' ஆகும் என்க. நஞ்சு என்னும் பொருள்தரும் சொற்களை முதல் நிகண்டாசிரியர் திவாகரர்,

“கடுவே, ஆலம், காள கூடம்

என்றும்,

விடம் காளம் கரளம் காரி நஞ்சே'

"ஆலம் காரி கடுவிடம் நஞ்சே”

என்றும் கூறுவார். இவற்றுள் கடு, காளம், காள கூடம், கரளம், காரி என்பவை கருமைப் பொருள் தருவனவே என்பது கருதுக.

இனி இறைவன்,

"ஆலமுண்ட நீல கண்டன்'

என்றும்,

“நீல மணி மிடற்று ஒருவன்"

என்றும்,

“காரி யுண்டிக் கடவுள்”

என்றும் குறிக்கப் பெறும் பெற்றி ஓர்க.

நஞ்சின் நிறம் 'ஆலம்' ஆதல் (கரு நிறம் ஆதல்) போல,

நஞ்சுண்ட உயிரியின் நிறமும் 'ஆலம்' ஆதல் ஆய்ந்து கொள்க.