உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

17

மதுவும் தேனும் மழையொடும் ஒப்ப ஒழுகலும் சொரிதலும் உடையவோ? எனின், சற்றே உயர்வு நவிற்சி எனக் கொள்ளினும் இலக்கிய வழக்கில் காணக் கூடியவேயாம்.

“நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்

வாரசும்பு ஒழுகும் முன்றில்"

அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து

திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே”

என்றும்,

என்றும்

பாரியின் பறம்பு மலையில் நறவும் தேனும் ஒழுகுவதும் சொரிவதும் சொல்லப் பெற்றமை கொள்க, (புறம். 114, 109)

“நுங்கிற் கள்ளின் உகுவார்"

அருந்தியும், "மேற்றுறைக் கொளீஇய கழாஅலில் கீழ்த்துறை உகுவார்" அருந்தியும் யாமை செருக்கித் திரிவதை அகப்பாடல் கள் காட்டுவதையும் காண்க. (256, 356).

வை இவ்வாறாக,

“ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும் சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும் மாலைவாய் உகுத்த தேனும் வரம்பிகந் தோடி வங்க வேலைவாய் மடுப்ப வுண்டு மீனெலாம் களிக்கு மாதோ!”

என்னும் கம்பர் பாட்டில், 'தேனும் கள்ளும்' பெருக்கெடுத்தலும் மீனும் பிறவும் களிப்புறலும் அறிவோர் பின்னை நாளில் ஆலிக்கு இப் பொருள்கள் உண்டாகிய அடிப்படையை உணர்வர். ஆலல்-அசைவு-ஆட்டம்:

இனி, 'ஆலி' என்பதற்கு அசைவு, சுழற்சி, விரிவு என்னும் பொருள்கள் உண்டானமையால் காற்று, தேனீ, பூதம் என்ப வற்றையும் குறித்தன என்பதை மேலே காண்க.

அசைவு, சுழற்சி, ஆட்டம் என்பன வெல்லாம் எப்படி உண்டாகின்றன? கையையும் காலையும் பிற உறுப்புகளையும் அகலச் செய்தலால் இவை பிறக்கின்றன. 'அகல்' என்பதே முன்னை விதிப்படி ஆல்,ஆலல், ஆலுதல் என்பனவாய் அசைவு, ஆட்டம் என்பனவற்றைக் குறித்தன. அகலிகையை 'ஆலிகை' என்றார் கம்பர் (நட்புக்.6).