உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

ஆடுதல்' என்றதும் நம் மனத்துத் தோன்றுவது மயிலின் ஆட்டமேயாகும். உவகை மீக்கூர்ந்த மயில், தன் தோகைகளை அகல விரித்து ஆடும். அகல விரிந்த அதன் தோகைத் தொகுதி 'ஆலவட்ட’மெனத் தோன்றும். அகல் வட்டமே ஆலவட்ட மாகிச் சிவிறியை-விசிறியை-க் குறித்தது. இதனை,

“நீல ஆலவட்டம் விரித்தாற் போலத்தன்

கோலக் கலாவம் கொளவிரித்து...ஓர் இளமயில் ஆடுவது நோக்கி நின்றாள்"

எனவரும் களவியல் உரையால் (2) அறியலாம். ஆலவட்டம்:

மயில் தோகையைக் கொண்டே 'ஆலவட்டம்' செய்யப் பெற்றது என்றும், பின்னே பிறவற்றால் செய்யப்பெற்றது என்றும், முதற்கண் அமைந்த பெயரே, மயில் தோகை மாறிப் பிறவற்றால் ஆலவட்டம் அமைந்த பின்னரும், பெற்றது என்றும் அறியலாம்.

C

"பீலியந்தழை பிணித்திட்ட வட்டமும், ஆலியங் கசைப்பன ஆல வட்டமும்"

என்றும்,

(1885)

“நீல ஆலவட்டத்தின் நிறங் கொளக்

கோலும் பீலிய”

(21)

என்றும் வரும் சூளாமணியால் மயில் தோகையால் ஆலவட்டம் அமைத்தமை அறியப்பெறும்.

அகல விரிந்த தோகை போன்ற வட்ட வடிவ விசிறிக்கு 'ஆலவட்டம்' என்னும் இயற்கையொடு பொருந்திய பெயர் உண்டாகியிருக்கவும் அதனைத் 'தாலபத்திரம்' என்பதன் சிதைவு என்றும், 'தாலவிருத்தம்' என்பதன் சிதைவு என்றும் கூறுவர் (சூளா 21. உ. வே. சா; பெருங் 1. 34: 218 உ. வே. சா.)

“சித்திரம் பயின்ற செம்பொன் ஓலை

முத்துவாய் சூழ்ந்த பத்திக் கோடசைஇச்

சிரற்சிற கேய்ப்பச் சிப்பம் விரித்த

கவற்றுவினைப் பவழங் கடைந்துசெய் மணிக்கை

ஆலவட்டம் நாலொருங் காட'

55

என்று பெருங்கதையும் (1:34; 214 -8)