உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

“அணித்தகு பவழம் ஏற்பக் கடைந்துமுத் தழுத்தி அம்பொன் துணித்தடி விளிம்பு சேர்த்தித் தொழுதகச் செய்த வண்கை மணிச்சிரற் சிறகு நாண வகுத்தசாந் தால வட்டம்

பணித்தகு மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித் தாரே”

19

என்று சிந்தாமணியும் (2478) கூறுவதால் ஆலவட்டத்து அமைப்பு நன்கு விளங்கும். இச் சிந்தாமணிக்கு உரைகண்ட நச்சினார்க்கினியர், "பொற்றகட்டை நறுக்கி விளிம்பிலே சேர்த்து பீலியிட்டுச் சிச்சிலியின் சிறகு நாண வகுத்த சந்தன ஆலவட்டத்தாலே வீசுதல் தொழிலுக்குத் தக்க மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித்தார் என்க" என்று எழுதிப் 'பீலியிட்டு' என்று சுட்டியதையும் கருதுக. பீலியாவது மயில் தோகை. மயில் தோகையால் ஆலவட்டம் செய்யப்பெற்றமையால் ஆலவட்டத்திற்குப் 'பீலி' என்றதொரு பெயரும் உண்டாயிற்று என்பதும் அறிக. (சூடா. நிக.7:38)

தோகையை அகல விரித்து ஆடுதலால் அமைந்த ‘ஆலி' 'ஆலுதல்' 'ஆலுகை' ஆகிய சொற்களுக்கு அசைவு, ஆட்டம், என்னும் பொருள்கள் உண்டாயின.

ஆலுதலின் பொருள் விரிவு:

ஆடுதல் உண்டாக வேண்டுமாயின் உள்ளக்கிளர்ச்சி உண்டு என்பது வெளிப்படை. மழைமேகம் கண்டும், இள வெயிலுடன் கூடிய சாரல் கண்டும் மயிலாடல் இயற்கை. தன் துணை அருகே இருக்க அகமுவந்து ஆடல் கண்கூடு. அப் போழ்தில் ஆடலுடன் கூப்பிடுதலும் (அழைத்தலும்) குரல் எழுப்பி மகிழ்தலும் இயற்கை. ஆகலின் 'ஆலுதல்' என்பதற்குக் கூப்பிடுதல், ஆரவாரித்தல் என்னும் பொருள்கள் உண்டாயின; மகிழ்தல், நிறைதல், செருக்குதல் என்னும் பொருள்களும் அதன்மேல் தோன்றின. “ஆலியங் கசைப்பன ஆல வட்டமே”

என்னும் சூளாமணியும் (1885)

66

'கடல், முழங்குதிரை முழவின் பாணியிற் பைபயப் பழம்புண் உறுநரின் பரவை ஆலும்”

என்னும் நற்றிணையும் (378) ஆலுதலுக்கு அசைதல் பொருள் உண்மையை விளக்கும். இதில் நற்றிணை, பழம் புண்பட்டோன்