உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

அந் நோவால் புரள்வதற்கு அலை புரள்வதை ஒப்பிட்டுக் காட்டியது அசைவுக்கு அருமை விளக்கமாம்.

"பயில்பூஞ் சோலை மயிலெழுந் தாலவும்.

“பழனக்காவில் பசுமயில் ஆலும்”

.99

‘பழன மஞ்ஞை மழைசெத் தாலும்'

என்பவற்றில் ஆலுதல் ஆடற் பொருளில் வந்தன.

“மடக்கண்ண மயில் ஆல"

“மழைவரல் அறியா மஞ்ஞை ஆலும்”

என்பவை அழைப்புப் பொருளில் வந்தவை.

“மஞ்ஞை ஆலும்” “மயில் ஆலும்”

(புறம்.116)

(பதிற். 27)

(பதிற். 90)

(பொருந. 190)

(ஐங்.298)

(பெருந். 435) (கலி. 36)

என்பவை ஆரவாரித்தல் பொருளில் வந்தவை.

இனி, மயிலின் அசைவு, ஆட்டம், அழைப்பு, ஆரவாரங் களுக்கு உரிமை பெற்றிருந்த ஆலுதல் பிற பறவைகளுள் சிலவற்றுக்கும், வேறு சிலவற்றுக்கும் அப் பொருள்களைத் தரும் வகையில் விரிந்தது.

“அன்னச் சேவல் மாறெழுந் தாலும்”

(புறம்.128)

என அன்னமும்,

“மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்”

(நற். 9)

எனக் குயிலும்,

“களிமயில் குஞ்சரக்குரல குருகோடாலும்"

(அகம். 145)

என ஆனையங் குருகும்,

“கம்புள் கோழி பெடையோ டாலும்”

(ஐங். 85)

எனக் கம்புள் கோழியும்,

“கரும்பு களித்தாலும்”

(ஐங். 342)

எனச் சுரும்பும்,

“களி வண்டு ஆல”

(சூளா. 758)

என வண்டும் ஆலுதல் கொண்டன.