உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

21

இனி, இவ் வாலுதல் இப் பறவைகளை அன்றிக் குதிரைக்கும் உரிமை பூண்டது. குதிரையின் விரைந்த செலவும், தாவி எழும்புதலும், அணிவகுப்பும் பறவைக் கூட்டத்தையும், அலை கடலையும் ஒக்கும்.ஆகலின், குதிரையொடும் ஆலுதல் இணைந்தது.

'ஆடும் பரி' என்றும் 'ஆடல் மா' என்றும் குறிப்பது போலவே, 'ஆலும்புரவி' என்றும் (சிலப். 26.84) ஆலுமா என்றும் (சூளா. 1363) கூறுவர். குதிரையின் நடை 'ஆடு நடை' எனப் பெயர் பெறும். "பணைநிலைப் புரவு ஆலும்" என்னும் சிலம்பும் (13.147) "காலியற் புரவி ஆலும்" என்னும் புறமும் (178) குதிரை ஆலுதலைக் குறிப்பன. குதிரை வளையமிட்டு நிமிர்ந்து தாவுதலை 'ஆலவட்ட மிடல்' என்பதும் கருதத்தக்கது.

ஆலுதலுக்குரிய முழக்கப் பொருள் கடலுக்கும் முரசுக்கும், கார் முகிலுக்கும் உண்மையால் அவையும் ஆலுதல் சொல்லை ஏற்றன.

“பரவையின் ஆலும்”

“ஆலித்த முரசு’

99

66

"ஆலுமா மழை

66

'அஞ்செவி நிறைய ஆலின"

(நற்.378) (சூளா. 1827)

(சூளா.21)

(pamaů. 89)

என்பவற்றை அறிக.

ஆலி ஆட்டம்:

'பொய்க்கால் குதிரை' என்பதோர் ஆட்டம் பழமையானது. குதிரை வடிவப் பொ(ய்)ம்மையுள் புகுந்து ஆடிய அவ் வாட்டம், பின்னே வெவ்வேறு வகைக் கோலங் கொண்ட மாந்தர், தெய்வப் பொ(ய்)ம்மைகளையும் தூக்கிக் கொண்டு ஆடும் ஆட்டமாக வளர்ந்தது. அதற்கு 'ஆலி' என்னும் பெயர் உண்டு என்பதை எவரும் அறிவர். ஆடற் பொருளில் அப் பெயர் வந்தது தெரிக. ஆடல், அசைதல், சுழலல் என்பவை காற்றுக்கு இயற்கை ஆதலால் 'ஆலி' என்பது காற்றையும் குறிப்பதாயிற்று.

அகலுதலால் அமைந்தது அன்றே ஆலி! அகற்சிக்கு அமைந்த பல சொற்களுள் 'பூ' என்பதும் ஒன்று. அவ்வகற்சிப் பொருள் கரணியமாகவே அரும்பு விரிந்தபின் 'பூ' என்றும், அகன்ற புவி 'பூ' என்றும் குறிக்கப்பெற்றனவாம். ஆகவே, பூதம் என்பதும் (மண், விண், தீ, நீர், காற்று) ஒன்றில் இருந்து ஒன்று விரிந்தது ஆகலின் பெற்ற பெயராயிற்று என்க.