உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

பூதம் விரிவுறுதலை,

“கருவளர் வானத் திசையிற் றோன்றி உருவறி வாரா ஒன்றன் ஊழியும், உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற் றுண்முறை வெள்ளம் மூழ்கியார் தருபு மீண்டும் பீடுயர் பீண்டி யவற்றிற்கும் உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்”

என்றும் (2),

"ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே இரண்டின் உணரும் வளியும் நீயே மூன்றின் உணரும் தீயும் நீயே

நான்கின் உணரும் நீரும் நீயே

ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே”

என்றும் (13) வரும் பரிபாடல்களானும், “காற்றிற் பெருவலி இருவராகி"

என்னும் திருநாவுக்கரசர் தேவாரம்,

“பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி”

,

என்பது முதலாக வரும் திருவாசகம் என்பவற்றானும், பூத விரிவை அறிந்து கொள்க. கொள்ளவே, ஆலிக்குப் பூதப் பொருள் கூறிய பொருத்தம் விளங்கும்.

ஆலு:

இனி, 'ஆலு' என்னும் சொல் பற்றிக் காண்போம்.

ஆந்தைக்குப் பெரிய விழிகள் உண்டு. அவற்றில் பரந்த கண்மணிகளும் உண்டு. அதன் பார்வை இருளை ஊடுருவித் துளைத்து நெடுந் தொலைவுக்குச் செல்லவல்லது.

வட்ட வடிவான தட்டை முகத்தில் ஆந்தைக் கண்கள் பொருந்தி இருப்பதால், அது, ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டு மென்றால் முகத்தை வளைத்துத் திருப்பியே பார்த்தல் வேண்டும். உடலை அசைக்காமல் தலையை மட்டும் அசைத்துப் பார்க்கத் தக்க அரிய அமைப்புடையது ஆந்தை. அவ்வருமையான சுழல்