உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

23

அமைப்புக் கண்ட அரிய நுண்ணோக்குடைய முந்தையோர், அச் சிறப்பு வெளிப்படும் வண்ணம் ஆந்தைக்கு 'ஆலு' எனப் பெயர் சூட்டினர். அதன் ஒலிக் கடுமையும் 'ஆலு' என்பதற்குத் துணை போவதாயிற்று.

இனி, 'ஆலு' என்பதற்கு, நீர், நீர்க்குடம், நீர்ச்சால், மிதவை என்னும் பொருள்கள் உண்மை நீர் என்பதன் வழியாக வந்தவையாம்.

ஆலை:

ரு

ஆல் என்பதில் இருந்து வந்த மற்றொரு சொல் 'ஆலை' ஆகும்.

'ஆலை' என்றதும் இப்பொழுது நினைவுக்கு வருவது பஞ்சாலை முதலிய பெரிய தொழிற்சாலைகளேயாம். ஆனால், முன்னாளில் ‘ஆலை' என்றால் கரும்பு ஆலையையே குறித்தது. இப்பொழுது 'சருக்கரை ஆலை' என வழங்கப் பெறுகிறது.

'ஆலைச் சரக்கு' என்றால் சுவைமிக்க அருமைச் சரக்கு என்னும் பொருள் உண்டு. 'அது என்ன ஆலைச் சரக்கா?' என வினாவும் வினாவே ஆலைச் சரக்கின் அருமையைப் புலப் படுத்தும். ஆலைப் பொருள் அமைதி அறிவோம்.

'ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூச் சருக்கரை'

'ஆலைக் கரும்பும் வேலைத் துரும்பும் போலானேன் 'ஆலைக்குள் அகப்பட்ட கரும்பு போல'

என்பவை பழமொழிகள்.

"ஆலைகள் வைப்போம் - கல்விச்

சாலைகள் வைப்போம்'

என்று பாரதியாரும்,

"ஆலையின் சங்கே நீ ஊதாயோ? - மணி

ஐந்தான பின்னும் பஞ்சாலையின்”

என்று பாரதிதாசனாரும் பாடினர். இந்நாளில் எங்கும் ஆலைகள் ஆலைத் தொழிலாளர்கள்! ஆனால், ஆலைச் சொல் மூலம் என்ன?

ஒளவைக்கு அரிய நெல்லிக்கனி வழங்கி அழியாப் பெருமை கொண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஔவையாரே,