உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

"அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்ன

கரும்பிவண் தந்தோன் பெரும்பிறங் கடையே”

என்று கூறுகிறார். "இந் நாட்டில் இல்லாத கரும்பை வேற்று நாட்டில் இருந்து கொணர்ந்து அருமை செய்தவனின் வழி வந்தவன் பொகுட் டெழினி என்கிறார். இதனால், அதியமானின் முன்னோரே கரும்பை இந் நாட்டுக்குக் கொணர்ந்து பெருக் கியவர் ஆவர். அவருக்குப் பின்னே நாடெல்லாம் பரவி வளர் வதாயிற்றாம் என அறியலாம்.

சங்கச் சான்றோர் நாளிலேயே கரும்பு ஆட்டும் 'எந்திரம்' தோன்றிவிட்டது என்பதை,

"கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது இருஞ்சுவல் வாளை பிறழும்"

"கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்”

என்றும்,

என்றும்,

66

(புறம். 322)

(ஐங்குறு. 55)

கணஞ்சால் வேழம் கதழ்வுற்றாங்கு, எந்திரம் சிலைக்கும் துஞ்சாக்

என்றும் வருவனவற்றால் அறியலாம்.

கம்பலை' (பெரும்பாண். 259-60)

எந்திரத்திற்கு 'ஏத்தம்' என்னும் பெயருண்டு என்பது,

“மழைகண் டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக் கழைகண் ணுடைக்கும் கரும்பின் ஏத்தமும்"

என்னும் மலைபடு கடாத்தால் (340-1) அறியப்பெறும்.

து

‘ஆலை' என்பது ஆட்டும் பொறி என்றும், அப் பொறியுள்ள இடத்துக்கு அப்பெயர் ஆயது என்றும் கொள்ளுமாறு "ஆலை- ஆகுபெயர்" என்றார் நச்சினார்க்கினியர் பெரும்பாண்.(200-1).

ஆலையில் கரும்பு ஆட்டப்பெற்றதையும், கரும்பின் கண் உடைந்து சாறு ஒழுகியதையும், அதனைக் காய்ச்சுங்கால் புகை சூழ்ந்ததையும், கரும்பாலைப் பக்கம் மணம் கமழ்ந்ததையும் சங்க நூல்கள் சாற்றுகின்றன.

"ஆலைக்கு அலமரும் தீங்கழைக் கரும்பே” “அடூஉம் புகைசூழ் ஆலை"

(மலை. 119)

(பெரும். 261)