உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

27

கண்டு தெளிவாராக. தெளியின் 'ஆலயம்' பொருள் பொதிந்த தண்டமிழ்ச் சொல்லே என்பதைக் கண்டு மகிழ்வர்.

ஆலோலம்:

'ஆலோலம்' என்னும் சொல்லைக் காண்போம். இச் சொல்லுக்கு அசைதல், அலைதல், நீரொலி, புள்ஓட்டும் ஒலி என்னும் பொருள்களை அகரவரிசை நூல்கள் தருகின்றன.

ஓல்,ஓலம், ஓலை என்பன ‘ஒலித்தல்' கரணியங் கொண்டு வந்த சொற்கள். 'ஆல்' 'ஓ' என்னும் இரண்டு சொற்கள் இணைந்து 'அம்' என்னும் சாரியை ஏற்று ஒரு சொல்லாய் நின்றன.ஆடியும் பாடியும் தினைப்புனத்துக் கிளியோட்டும் மகளிர் செய்கை 'ஆலோலம்' எனப்பெற்றது. அவர்கள் பாட்டொடும் 'ஆலோலம்' என்னும் முடிநிலையும் இருந்தது. ஆதலால், அம்மானை, கோத்தும்பி, பூவல்லி என்பன போல 'ஆலோலம்' என அது பெயர் பெற்றது என்க.

“பூவைகாள் செங்கட் புறவங்காள் ஆலோலம் தூவிமா மஞ்ஞைகாள், சொற்கிளிகாள் ஆலோலம் கூவல் சேர்வுற்ற குயிலினங்காள் ஆலோலம் சேவல்காள் ஆலோலம் என்றாள் திருந்திழையாள்”

ச்

என்பது வள்ளியம்மை ஆலோலப் பாட்டு (கந்த. வள்ளி. 54). இச் சொல்லாட்சி பிற்கால வழக்காகும்.

'அகல்' என்பது 'ஆல்' ஆகிப் பெருகிய சொற்களைக் கண்டோம். இனி, அகல் என்பதில் இருந்து கிளைத்த அகறல், அகற்சி முதலிய சொற்களைக் காண்போம்.

அகறல்:

அகறல், அகற்சி என்பவை அகலல், விரிதல், பெருகல், பிரிதல், கடத்தல், நீங்கல், ஒழிதல் முதலிய பொருள்களைத் தரும். இவை ஒன்றற்கு ஒன்று தொடர்பாகவும், வளர்ச்சியாகவும் அமைந்த பொருள்களே. இவ் வனைத்துப் பொருள்களுக்கும் அடிப்படை 'அகலல்' தன்மையே. இவற்றுள் அகலல், விரிதல், பெருகல் என்பவை ஒரு தொடர்பெற்றனவும் பிரிதல், கடத்தல், நீங்கல், ஒழிதல் ஒரு தொடர் பெற்றனவும் ஆகும். முன்னவை அகலிப்பையும், பின்னவை அகலிப்பால் இடையறவுபட்டும் ஒழிந்தும் போதலையும் இடனாகக் கொண்டவை.