உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

“களிறு சென்று களன் அகற்றவும்"

"அறிவகற்றும் ஆகல்ஊழ்”

என்பவற்றில் வரும் அகறல் 'அகலிப்பை' உணர்த்துவன.

"அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே”

"தெவ்வுப் புலம் அகற்றி”

59

"ஐயறிவு அகற்றும் கையறு படர்

(புறம்.26)

(திருக். 372)

(தொல்)

(சிறுபாண். 246)

(அகம். 71)

என்பவற்றில் இடையறவு படலும்,ஒழிதலும் பொருளாக அகறல் வந்தன. இவ்வகறல் பண்பு பருப்பொருள் நுண்பொருள் இரண்டற்கும் இயையப் பெருகிவருவனவாம்.

"மென்தோள் அகறல்" என்பது (திருக். 1325) பருப்பொருள் அகற்சியாம். "தெவ்வுப் புலம் அகற்றி" என்றதும் இதுவே.

அறிவு, வறுமை, துன்பு, இருள் ஆகியவற்றை ஒழித்தல் நுண் பொருள் அகற்சியாம்.

"ஐயறிவகற்றும் கையறு படர்”

(அகம். 71)

என்பது அறிவு அகற்றல்.

"இலம்பாடு அகற்றல் யாவது”

(புறம். 381)

“நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி”

(புறம் 337)

என்பவை வறுமை அகற்றல்.

“இனையல் அகற்ற”

(புறம். 377)

"இரும்பே ரொக்கல் பெரும் புலம்பு அகற்ற”

(புறம்.390)

என்பவை துன்பு அகற்றல்.

“குணக் கெழு திங்கள் கனை இருள் அகற்ற"

(புறம். 376)

"ஆரிருள் அகற்றிய மின்னொளிர்

(அகம். 272)

"எஃகிருள் அகற்றும் ஏமப்பாசறை”

(புறம். 397)

"ஒளிதிகழ் திருந்துமணி நளிஇருள் அகற்றும்'

99

(புறம்.172)

“அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்”

என்பவை பல்வேறு வகைகளில் இருள் அகற்றலாம்.

(புறம். 56)

அறியாமை, வறுமை, துன்பம் என்பவை 'உள்ளிருள்' அல்லது 'அக இருள்' என்பதும், ஏனை இருள் 'புறவிருள்

+