உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

66

'ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்”

'ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன்”

LD600fl.11: 92-3

நாலடி. 98.

என்பவற்றைக் காண்க.

தேற்றுதலால் அமையும் தேறுதல் போல, ஆற்றுதலால்

அமைவது ஆறுதலாம்.

"தீயினால் சுட்டபுண் உள்ளாறும்"

66

‘ஆறுவது சினம்

"வெந்தாறு பொன்னின் அந்திபூப்ப"

என்பவை ஆறுதல் காட்சிகளே. இவ் வாறுதல் அனைத்தும் அகற்றுதல் வழியாக வந்தவையே.

தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லக் கருதுகிறான். அதனைக் குறிப்பால் அறிந்து கொண்ட தலைவி வருந்துகிறான். தலைவன் அவளை ஆற்றிப் (பிரிவுத் துயர் அகற்றிப்) பிரிகிறான். "தலைவி தன் பிரிவை அறியின் வருந்துவள்; அதனைத் தாங்குதற்கு அரிது" என்று எண்ணித் தலைவன், அவள் அறியாமல் பிரிவதும் உண்டு. அந்நிலையில் அவள் ஆற்றாது துயர் அடைவாள். அவள் தன் ஆருயிர்த் தோழி ஆற்றுவிப்பாள்; ஆறியிருப்பாள் தலைவி. இவ்வாறாக அகப்பொருள் இலக்கண இலக்கியங்களில் வரும் ஆறுதல்,ஆற்றுதல் என்பன வெல்லாம் இவ் வகற்றுதல் வழிவந்த சொற்களே.

பசித்துக் கிடக்கும் ஒருவனுக்கு, அவன் பசியாற ஒருவன் உணவு படைக்கிறான்; 'பசியாறி' மகிழ்கிறான் பசியுற்றவன்; கடுவெயிலில் நெடுவழி நடந்தவன் 'காலாறிக்' கொள்கிறான். இவ் வாறுதல்கள் அகலுதல் வழிவந்தவையே. முன்னதில் பசி யகலுதல், பின்னதில் வெப்பமும் வலியும் அகலுதல்.

இறந்தவர் உடலுக்கு எரியூட்டிய மறுநாள் செய்யும் ஒரு சடங்கிற்குத் 'தீயாற்றுதல்' என்பது பெயர். எரிந்து பட்டுக் கிடக்கும் பொடியின்மேல் நீர் தெளித்து வெப்பம் அகற்றிச் செய்யும் கடனே தீயாற்றுதல். இவ்வாறு அகற்றுதலே ஆற்றுதலாக எண்ணற்ற வழக்கங்கள் உள்ளமை அறிக.

“ஆற்றுதல் என்பதொன்று அலந்தவர்க் குதவுதல்” “பொருமுரண் ஆற்றுதல்”

(கலி. 133)

(நாலடி. 149)