உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

66

'அருநவை ஆற்றுதல்'

31

(நாலடி. 295)

என்பவற்றை நோக்குக.

ஆற்றல்:

இனி, 'அகற்றல்' என்பதே 'ஆற்றல்' என ஆகியமை காண்போம்.

ஆற்றல் பண்பை உலகம் ஆண்மையினிடம் மிக எதிர் பார்க்கிறது. ஆதலால் முழுமுதல் இலக்கண ஆசிரியர் தொல்காப்பியனார்,

66

'ஆற்றலொடு புணர்ந்த ஆண்பால்”

என்றார்.

(1549)

'போரிலாத உலகைக் காணவேண்டும்' எனின் அதற்கும் அறப்போரோ மறப்போரோ செய்தே ஆகவேண்டியுள்ளது. உலக அமைதிக்கென நிறுவப்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் அமைப்பும் உலக அமைதிகாக்கப் படை வைத்திருந்தாலும், போர் செய்தலும் வேண்டியே உள்ளன. ஆகலின், 'பகை அழித்தல்' ஓர் ஆற்றலாக உலகம் கொண்டுள்ளது என்பது வெளிப்படை.

66

“அரைசுபடக் கடக்கும் ஆற்றல்" “உறுமுரண் கடந்த ஆற்றல்"

(பதிற். 34)

(புறம்.135)

“அருஞ்சமங் கடக்கும் ஆற்றல்"

(புறம்.397)

“அரும்பகை தாங்கும் ஆற்றல்"

(தொல். 1022)

66

"அருங்குறும்பு எறிந்த ஆற்றல்"

(அகம், 342}

(மலை. 73)

(புறம்.229)

“இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றல்" “பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல்” “அமர்க்கடந்த நின் ஆற்றல்"

(புறம். 66,99)

வை, பகை கடக்கும் ஆற்றல். புறப்பகையை அடக்குதலினும் அகப்பகை அடக்குதலே அருமை என்னும் கருத்துச் சான்றோரிடமே அரும்பியது. "புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்" எனப் போற்றப்பெற்றது. அத்தகைய அடக்கத் தரைப் பெருவீரர் (மகாவீரர்) எனவும் பாராட்டினர். “நோற்றலின் ஆற்றல்" என்றார் திருவள்ளுவர் (269). அவரே, "ஐந்துவித்தான் ஆற்றல்' பற்றியும் உரைத்தார் (25).