உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

மாறுபட்டு நிற்பார் மாறுபாட்டை அகற்றுதலும் எளிய செயல் அன்று; அருஞ்செயலே; ஆகலின், அதனைப்

'புணர்த்தல் ஆற்றல்" என்றார் தொல்காப்பியனார் (1075)

"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து} ஊதிய மில்லை உயிர்க்கு”

என்னும் தெளிவுடையவரே கொடையாளராகத் திகழ்வர். அத்தகையர் அருமையைத் 'தாதா கோடிக்கு ஒருவர்'என்பர். ஆகலின், 'ஓம்பாது ஈயும் ஆற்றல் புறநானூற்றில் புகழ் பெறுகிறது. (22)

இனி, வள்ளுவர் மூன்று தலையாய ஆற்றல்களைக் குறிக்கிறார். அவை,

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்"

(225)

"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை"

(891)

'ஆற்றுவார் ஆற்றல் பணிதல்"

""

(985)

என்பவை. பசியாற்றுதலை,

“வாடுபசி ஆற்றிய பழிதீர் ஆற்றல்"

என்று புகழ்ந்து பாடும் புறநானூறு (227).

பெருமை, அறிவு, முயற்சி என்னும் மூன்றையும் ஆற்றல் என்று சூளாமணி சொல்லும்; அதற்கு மேம்பட்ட ஆற்றல் 'சூழ்ச்சி' என்னும் அது.

"ஆற்றல்மூன் றோதப்பட்ட அரசர்கட் கவற்றின் மிக்க

ஆற்றல்தான் சூழ்ச்சி என்ப”

என்பது அது.

(250)

தன்னுயிர் கொடுத்தல் அருமையினும் அருமைப்பட்டது. பொன்னைக் கொடுப்பாரும் தன்னைக் கொடுத்தல் அரிதே காண்! அதனைக் கொடுக்கும் ஆற்றலை,

66

"ஆற்றலோ டாண்மை தோன்ற

ஆருயிர் வழங்கி வீழ்ந்தார்"

என்கிறது சிந்தாமணி (2267).