உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

33

எடுத்த செயலை இடைத்தடையின்றி இனிது நிறை வேற்றலும் ஆற்றலே! அது தொழிலாற்றல் (பதிற். 28) இவற்றுள் எல்லாம் அகற்றலே ஆற்றலாய் அமைந்துள்ள சீர்மை அறிக.

ஆற்றல் என்பதற்கு அகரமுதலி நூல்கள், அறிவு, ஒத்தல், கூட்டம், செய்தல், தணித்தல், தாங்குதல், நிலபெறுதல், நீங்குதல்,பெருமை,பொறுத்தல்,முயற்சி, வலிமை, வன்மை, வெற்றி இன்னபல பொருள்களைத் தருதலும் கருதுக.

அகன்றோர்-ஆன்றோர்:

இனி, அகன்ற அகன்று என்பவை, ஆன்ற, ஆன்று என்றும், அகன்றோர் என்பது ஆன்றோர் என்றும் வழங்கும் வகையைக் காண்போம்.

அறிவு, கேள்வி முதலியவை விரிவும், அமைதியும், நிறையும் உடையன. ஆகலின், அவ்வகற்சிப் பொருள் அடிப்படையில் 'ஆன்ற அறிவு' 'ஆன்ற கேள்வி' எனப் பெற்றன.

"ஆன்ற அறிவில் தோன்றிய நல்லிசை"

"ஆன்ற அறிவும்’

என்று அறிவும்,

66

99

"ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை”

(பதிற். 57) (திருக். 1022)

(புறம்.26)

“பல்லான்ற கேள்விப் பயனுடையார்

99

(நால். 106)

“பல்லான்ற கேள்விப் பயனுணர்வார்"

(நால். 256)

என்று கேள்வியும் குறிக்கப்பெறுகின்றன.

குடிவரவும்,பெருமையும் அகன்ற சீர்மைத்தாகலின்,

"அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்’

"

(திருக். 681)

"ஆன்ற பெருமை"

(திருக். 416)

CC

"ஆன்ற பெரியர்"

(திருக். 694)

'ஆன்ற மதிப்பும்"

(நால. 163)

எனச் சுட்டப்பெறுகின்றன.

இனிக் கற்பு, ஒழுக்கம், முதலியனவும் அகன்ற புகழுக்

குரியனவாகலின்,

"ஆன்ற கற்பில் சான்ற பெரியள்"

(அகம். 198)