உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

முயலும் முயற்சியூடே, ஒளிந்து மறைந்த குழந்தை தன் ஒளி முகத்தை மீண்டும் காட்டுவதுபோல அச் சொல் தன்னைக் காட்டவும்கூடும்! அப்பொழுதேனும் மறக்காமல் குறித்துக் கொள்ள வேண்டுமே! மீண்டும் நம்பிக் கைவிடலாமா? பட்டுப் பட்டு அறிவதால் வருவதுதானே பட்டறிவு? அதனைப் பட்டென்று போகவிட்டால் பட்டறிவாகாது.பட்ட அறிவாகத்தானே போய்விடும்?

சொற்றொகுப்புப் பணியிலும் சொல்லாக்கப் பணியிலும் ஈடுபடுபவர் எப்பொழுதும் கண்ணுக்கும், காதுக்கும், கருத்துக்கும் வேலை கொடுத்து, விழிப்பாக இருக்கவேண்டும் என்பதுமட்டும் போதாது. கையிற்கும் கட்டாயம் தவறாமல் வேலை கொடுத்தலும் வேண்டும்.

-

ஒரு சொல்தானே! இதற்காகத் தாளை எடுத்து, எழுது கோலைத் திறந்து எழுதவேண்டுமா? நடக்கும்போதோ, வண்டியில் போகும்போதோகூட எழுதவேண்டுமா? கட்டாயம் எழுத வேண்டும்! ஏன் உண்டு கொண்டிருக்கும் போது கூட ஒரு புதுச்சொல் கிடைக்குமாயின், அவ் வுணவுச் சுவையிலும் சொற்சுவையைப் பெரிதாக நினைத்து, உடனே

-

இலக்கண இலக்கிய நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றில் இடம் பெற்ற சொற்கள் இவற்றில் உண்டு. சில வழக்குச் சொற்களாகவும் வட்டார வழக்குச் சொற்களாகவும் உண்டு இவற்றுள் அகரமுதலியில் இடம்பெறாதனவும் உண்டு. ஆனால், அனைத்தும் செந்தமிழ்ச் சொற்களே. பிறமொழிச் சொற்கள் பெருக வழக்குள்ளவை எனினும் அவை தமிழ்சொல்வளம் காட்டாதது மட்டுமன்றித் தமிழ்ச்சொல்வள அழிப்புக்கு இடனாகி வழங்குபவை ஆகலின் அவை விலக்கப் பெற்றனவாம்.

இவ்வாய்வால் தமிழ்ச் சொல்வளம் அறியலாம். சொற்களின் பொருளும் வரலாறும் அறியலாம். சொற்களின் ஆட்சி பழமை, புதுமை ஆகியனவும் அறியலாம். புத்தாக்கச் சொற்படைப் புக்கும் துணை வாய்க்கும். அகரமுதலிகளில் இணைக்கப் பெற்றுச் சொற்பெருக்கமும் செய்யலாம். ஆய்வாளர் ஆய்வுக்குத் தக்க தூண்டுதல் கிட்டும். இவ்வுட்கொளல் கருத்துப் போல், பற்பல கருத்துகளுக்கும் ஆய்வு வேண்டத்தக்கதே! இது 'பொது நூல்' அன்று! 'புலநூ'லாம்!