உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

47

"செல்லரித்த ஓலை செல்லுமோ?" என்பது திருவரங்கக்

கலம்பகம் (53)

பூச்சி புழுக்கள் அரித்துத் தின்பது போல நொய்தாக அரித்துத் தின்பது அரித்தலாம்.

10. அருந்துதல் - சிறிது சிறிதாகத் தின்னுதல் அல்லது குடித்தல் அருந்துதல் ஆகும். இதனைச் சூடாமணி நிகண்டு 'அருந்திடல்' என்னும் (9.6)

"நெய்ம்மிதி அருந்திய" என்பது புறநானூறு.(299)

"அருந்து மெல்லடகு ஆரிட அருந்தும்" என்பது இராமாயணம் (சுந்.)

அருந்துதல் தண்ணீர் குடித்தலை ஆதலை, “தண்ணீர் அருந்தி" எனவரும் தாயுமானவரால் அறியலாம் (அருளி. 11). நுகர்தல் என்னும் பொருளில் வருவதை "ஆருயிர்கள் பயனருந்து மமருலகம்' என்னும் கோயிற் புராணத்தால் அறியலாம் (வியாக். 6). இனி, இது விழுங்குதல் பொருளிலும் வரும் என்பது "அங்கவற்றையும் பற்றி அருந்தினான் எனவரும் கந்த புராணத்தால் விளங்கும் (இரண்டாம் நாள். சூர. 65). (

95

11. அரைத்தல் - அம்மியில் இட்டு அரைப்பது போல ஓயாது ஒழியாது தின்றுகொண்டிருப்பது அரைத்தல் ஆகும். ‘அரைநிலை' என்பது அம்மி. அரைத்தற்குரிய பொருள்களுக்குச் செலவிடுவது 'அரை செலவு' ஆகும்."அரைசிலை குமிழ்ப்பு வடித்தல்” என்பது தைலவகைப்பாயிரம் (12)

12.அளித்தல் - அருள் பெருக உண்ணுமாறு செய்வது அளித்தல் ஆகும். அளியாவது அருள். "அளித்து அயில்கின்ற வேந்தன்" என்றார் திருத்தக்க தேவர் (சீவக. 192). இடுதல், ஈதல் போல்வது அளித்தலாம். கொடுத்தல் என்னும் பொதுப் பொருளில் நீங்கி, உணவு உண்பித்தல் என்னும் சிறப்புப் பொருளில் வந்ததாம்.

13. அளைதல் -மழலைக் குழந்தை கையால் உணவை அளாவி உண்ணுதல் அளைதலாகும். "இன்னடிசில் புக்கு அளையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய் மக்கள்” என்றார் புகழேந்தியார் (நள.கலிதொ.68). மதுவுண்பது, அளைதல் எனப்பெறும் என்பது, "அளைவது காமமடு நறவு" என்னும் சிந்தாமணியால் புலப்படும் (கேம்.140)