உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

14. ஆர்தல்-வயிறு நிரம்ப விரும்பி உண்ணுதல் ஆர்தலாகும். ஆர்தல் நிரம்புதலும் விரும்புதலுமாம். 'வயிறார உண்ணுதல்' என்பது வழக்கு. 'ஆர்பதம்' என்பது உணவாகும். "ஆர்பதம் நல்கும்" என்று கூறும் பதிற்றுப் பத்து (66). ஆர்பதம், ஆர்பதன் என்றும் வரும் (பதிற். 55). ஆர்த்தல் என்பது உண்பித்தல், நுகர்வித்தல் பொருளவாகும். "வருநிதி பிறர்க் கார்த்தும்” என்பது சிலம்பு (மங்கல. 33). "தனப்பால் ஆர்த்தி" என்பது கந்தபுராணம்

(umíůu. 27).

15.ஆவுதல் -ஆவென வாயைத் திறத்தல் ஆவுதலாம். ஆவென வாயைத் திறந்து வாங்கி யுண்ணுதலும் ஆவுதல் எனப்பெற்றது.

“காசினிக்கும் வெண்ணெய்க்கும் செம்பவளம் ஆவென்றால்"

என்று திருவேங்கடமாலை, ஆவெனலை உண்ணுதலாகக் குறிக்கும் (16) 'ஆவு ஆவு' என்றும், 'அவக்கு அவக்கு' என்றும்- தின்னுகிறான் என்பன. பேரார்வத்தால் விழுங்குதலைக் குறிக்கும் வழக்குகளாம்.

16. ஆற்றுதல் - அகற்றுதல் என்பது ஆற்றுதல் ஆயிற்றாம், புகட்டுதல் என்பது போட்டுதல் என்று ஆயினாற் போல. பசிமிக்குக் கிடந்தாரின் பசி வெப்பு அகலுமாறு உண்பித்தல் ஆற்றுதலாம். 'பசியாறல்' 'பசியாற்றல்' என்பன வழக்குகள். "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்" என்பது நெய்தற்கலி (16)

17. இடுதல் - 'இட்டார் பெரியர்; இடாதார் இழி குலத்தார்' "உப்பிலாக் கூழிட்டாலும்" என்று வரும் இடங்களில், 'இடுதல்' என்பது ஈதல் பொருளில் வந்தாலும், "வயிற்றுக்கும் ஈயப்படும்' என்னும் இடத்துப்போல உட்கொளல் பொருளிலும் வரும். 'மடியகத் திட்டாள் மகவை" என்னும் சிலம்பு இதற்குச் சான்றாம் (9 : 22). 'இடுகுழி' 'இடுகாடு' எனவரும் வழக்குகளைக் கருதுக.

18. இரையெடுத்தல்-பறவை பாம்பு முதலியவை உணவு கொள்ளுதல் 'இரையெடுத்தல்' எனப்படும் (ம.த.ச.அ). கோழி தின்னுதலை இரையெடுத்தல் என்பது வழக்கு. அவ்வாறே சிறு தீனிகளைப் பொறுக்கித் தின்பதை இரையெடுத்தல் என்பதும்

ரைபோடல்' என்பதும் வழக்கு "என்ன, இரை எடுத்தாயிற்றா? இரைபோட்டாயிற்றா?" என்று வினவுவாரை. நாட்டுப் புறங்களில் காணலாம். "துரை, இரை எடுக்கிறார்" என்பது முள்ளால்