உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

49

குத்தியுண்ணும் முறை நோக்கி எழுந்ததாகலாம். "இரைக்கே இரவும் பகலும் திரிந்து" என்பார் பட்டினத்தார் (திருக்கா.5) "இரைதேர்வண் சிறுகுருகே" என விளிக்கும் திருவாய்மொழி.(1

4.5).

19. இழுத்தல் - புகை, காற்று போன்றவற்றை உட்கொளல் இழுத்தல் எனப்படும். புகை பிடித்தலைப் 'புகையிழுத்தல்' என்பதுண்டு. மூச்சு இழுத்தல், மூச்சு இரைத்தல் என்பன வழக்கில் உள்ளன. இறக்குந் தருவாயில் மூச்சுவிடவும் திணறு வாரை 'இழுபறியாகக்கிடக்கிறார்' என்பர். இழுத்தல், உறிஞ்சுதல் என்னும் பொருளிலும் வரும். 'உறிஞ்சி இழுத்தல்' என்பதும் வழக்கே.

-

20. இறக்குதல் மேல் இருந்து கீழ்வரச் செய்தல் இறக்குதலாகும். உமிழ்நீர் உட்கொள்வதை இறக்குதல் என்பர். இறக்கும் தறுவாயில், வாயில் பால்விட்டு "இறங்குகிறதா? இறங்கவில்லையா" என்று ஆய்வது வழக்கு. 'உ 'உனக்கு இது இறங்காது' என்று எள்ளுவதும், 'மடக்கு என்று இறக்கு' என்று மருந்துண்ணக் கட்டளையிடுவதும காணும் நடைமுறைகள்.

21. இறைத்தல் - தெளித்தல், பொழிதல், கொட்டுதல் ஆகிய பொருளில் வரும் இறைத்தல் என்னும் சொல், உட் செலுத்துதல் பொருளிலும் வரும்.

"வீணையர் இன்னிசை செவிதொறும் இறைப்ப"

என்பது அது (உபதேச. சிவபுண். 318).

"

22. ஈதல் - இரவலனுக்குத் தருவதுபோல் உயிர் வாழ்வு கருதிச் சிறிதளவே உணவு தருதல். 'ஈ என்பது இழிந்தோன் கூற்று' என்னும் தொல்காப்பியம் (938). "ஈயன் இரத்தல் இழிந்தன்று என்னும் புறநானூறு (204). "சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்றார் திருவள்ளுவர் (412).

23.உட்கொளல் -உட்கோள் என்பதும் அது. வாயின் உட் பெய்து கொள்ளுதலை உட்கொளல் என்றனர். உள்ளே கொள்ளுதல் என்பது சொற்பொருள். "சீலமோ டணிந்து உட்கொண்டு" என்பது கந்தபுராணம் (திருக்கல். 83)

24. உட்செலுத்தல் - வயிற்றின் உள்ளே செலுத்துதல், வயிற்றின் உள்ளே தள்ளுதல் என்னும் பொருளில் வருவது இது. "செல்லும் செல்லாததற்கு, அவன் இருக்கிறான் என்பது எதையும் கழிக்காமல் உண்பவனைக் குறிப்பது வழக்கு. ஊசி