உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

வழியே மருந்தும் ஊட்டமும் செலுத்துவதும், உட்செலுத்து தலாம். உட்செலுத்துதல் பெருமபாலும் கட்டாயத்தால் நிகழ்வதாம்.

25. உண்ணுதல் -உணல் என்பதும் அது. சோறும் நீரும் நீர்ப்பொருள்களும் உட்கொள்ளுதல் உண்ணுதலாம். "உணலினும் உண்டது அறல்" என்னும் திருக்குறளும் (1326) "உண்ணாமை கோடி யுறும்' என்னும் ஔவையார் தனிப் பாட்டும் சோறுண்ணுதலைக் குறிக்கும். 'உண்ணுநீர்' என்னும் கலித்தொகை நீர் உணவையும், "உண்ணற்க கள்ளை" என்னும் திருக்குறள் நீர்ம உணவையும் குறிக்கும். 'உண்டாட்டு' என்னும் புறத்துறை, மதுவும் சோறும் கறியும் உண்டு மகிழ்தலைக் குறிப்பதாம்.

26.உதப்புதல் வாயில் இருந்து உணவு வெளியே வரும்படி மிகுதியாக வைத்துச் சவைத்துண்ணல் உதப்புதலாம். ஆடு அசைபோட்டுக் கடைவாய்ப்புறம் உணவைத் தள்ளி இறக்குதலும் உதப்புதல் எனப்படும்.

27. உய்த்தல் - கன்றைத் தாயின் இடத்தில் செலுத்திப் பாலுண்ணச் செய்தல் உய்த்தலாகும். உய்த்தல் செலுத்துதல் பொருளில் வருதல் "காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் எனவரும் திருக்குறளால் விளங்கும் (440). இனிப் "புலிப்பால் பட்ட ஆமான் குழவிக்குச் சினங்கழி மூதா பாலூட்டுதல் போல்வனவும் உய்த்தலாம் (புறம்.323).

28. உருங்குதல் அச்சுறுத்தி அடித்துத் தின்னுதல் உருங்குதல் எனப் பரிபாடலில் ஆளப்பட்டுள்ளது. பருந்து பாம்பைப் பற்றியுண்ணல் உருங்குதல் எனப்படுகின்றது. 'விடமுடை அரவின் உடலுயிர் உருங்கும் உவணம் என்பது அது 442. உவணமாவது பருந்து, கருடன் என்பதும் அது.

66

29.உருட்டித்தள்ளல் - கவளம்போல் சோற்றை உருண்டை உருண்டையாய் ஆக்கி மெல்லாமல் கொள்ளாமல் உட்கொள்வது அல்லது விழுங்குவது உருட்டித் தள்ளுதலாம். 'அள்ளிப் பிசைந்து உருட்டி' என்பது சைவசமய நெறி (பொது. 186)

30.உறிஞ்சுதல் - இதழ் சுருக்கி நீரை ஊச்சிக் குடித்தல் உறிஞ்சுதலாகும். மூக்கால் பொடியை இழுத்தலை, ‘உறிஞ்சுதல்’