உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

51

என்பது வழக்கு. வழியும் மூக்கைத் துடைக்காமல் உள்ளிழுப் பவனை 'மூக்குறிஞ்சி' எனப் பட்டப்பெயர் வைத்தழைக்கும் "மூக்குறுஞ்சி மொட்டைக் காளை கைதை" என எள்ளல் பாட்டு இசைப்பதும் சிறுவர் வழக்கம். ஒரு துறவி பிறவெல்லாம் துறந்தும் பொடியைத் துறவானாய், 'மூக்குத் தூளே உன்னை நான் துறக்கமாட்டேன் உறிஞ்சுவேன் உறிஞ்சுவேனே" என்றது புதுப்பாட்டு.

31.உறிதல் -உறிஞ்சி அல்லது துளைத்தண்டு வழியே நீரையும் நீர்மப் பொருள்களையும் உறிஞ்சிக் குடித்தல் ‘உறிதல்’ ஆகும். இந்நாளில் இளநீர், குளிர்நீர்க் குடிவகை ஆகியவற்றை உறிஞ்சியால் உறிஞ்சிக் குடித்தல் பெருகிய வழக்கமாம்.

<

32. ஊச்சுதல் ஊச்சு ஊச்சென ஒலியெழ உறிஞ்சிக் குடித்தல் ஊச்சுதல் எனப்படும். "பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும்” என்பது ஐந்தினை ஐம்பது (37).

33. ஊட்டுதல் - குழந்தைகட்கும், நோயர்கட்கும் பாலும் சோறும் முதலியன உண்ணச் செய்தல் ஊட்டுதலாம். சோறு கவளமாக உருட்டித் தரப்பெறுதலாலும் ஊட்டுதலாம். மழவிளங்கன்றைத் தாய் மடுவில் உண்பித்தலும் ஊட்டுதலே. ஊட்டி' என்று சங்கைக் குறிப்பதும், 'ஊட்டுப்புரை' என அட்டிலைக் குறிப்பதும் அறியத்தக்கன. பண்டைத் தாய்மார் என குறித்த ஐவருள், 'ஊட்டுத் தாய்' என்பாரும் ஒருவர் என்பதும் அறியத்தக்கது. "அறுசுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட என்பது நாலடி (1).

34. ஊதுதல் வண்டு தேனீ தும்பி ஆகியவை தம் சுரும்பினால் பூவுள் தேனை உறிஞ்சிக் குடித்தல் 'ஊதுதல்' எனப்படும்."தேம்பட ஊதுவண்டு இமிரும்" (187) "தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டு" (290) என்பவை நற்றிணை. ஊதுதலைக் குருகு, உள்ளூது ஆவி என்பவை புறச்செலவு பற்றியது என்பதும், வண்டு மலருதல் உட்செலவு பற்றியது என்பதும் இவண் கருதத்தக்கன.

35.ஊப்புதல் -பரும்பொருளும் அதனொடும் அமைந்த நீரும் கலந்து இருக்கப், பருப்பொருள் வாயுள் புகாது நீர்மப்