உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

பொருள் மட்டும் புகுமாறு இதழ் நெருக்கி உறிஞ்சிக் குடித்தல் ஊப்புதலாம். இஃது ஊச்சுதல் சூப்புதல் என்பவற்றின் வேறாதலை அவற்றொடு ஒப்பிட்டுக் காண்க.

36. எடுத்தல் - கோழி நீரை எடுத்து மேனோக்கி வாயைத் தூக்கிக் குடிப்பது போலக் குடித்தல், எடுத்தலாம்.

இனி, எடுத்துண்ணுதல் கருதியது எடுத்தல் என்றுமாம். 'இரையெடுத்தல்' என்பது வழக்காறு. இரையெடுத்தல் காண்க.

37.ஏற்றுதல்

-

ஊசி குழாய் இவற்றின் வழியே மருந்து உணவு முதலியவற்றை உள்ளே செலுத்துதல் ஏற்றுதலாகும். ஊட்டநீர்,உயிர்வளிநீர், அரத்தம் ஆயன ஏற்றுதல் மருத்துவத் துறை நடவடிக்கை, ஏறி இயக்குதலாலும், சாலையும் நீரையும் ஏற இயக்குதலாலும், ஏற்றம் என்னும் பெயர் பெற்ற தென்பது இவண் கதத்தக்கது.

38.ஒதுக்குதல் -உணவை ஒரு கன்னப் புறத்தில் ஒதுக்கிப் பதமாக்கி உண்ணுதல் ஒதுக்குதலாகும். பல்லுக்குப் புறத்தே கடைவாய்ப் பகுதியில் வெற்றிலைத் தம்பலத்தை நெடும்பொழுது ஒதுக்கி வைத்து இன்புறுவாரை நாட்டுப் புறத்தில் இன்றும் காணலாம். சிறுவர் இன்பண்டங்களை ஒதுக்கிவைத்து உண்டல் கண்கூடு.

39.கடித்தல் - வன்மையான பண்டங்களைப் பல்லால் வலுவாகக் கடித்துத் தின்பது கடித்தலாம். “கடித்துக் கரும்பினைக் கண்தர நூறி" என்று நாலடியார் கூறும் (156). கடித்தல் வேறு; கறித்தல் வேறு. கறித்தலை ஆங்குக் காண்க.

=

40. கப்புதல் அசை போடாதும், இதழ் மூடியும் வாயுள் அட்க்கித் தின்னுதல் கப்புதலாம் புகைமூடி அல்லது மண்டிக் கிடத்தலைப் புகை கப்பிக்கிடக்கிறது என்பது வழக்கு. கோழி, நொய் நொறுங்கு தவிடு இவற்றைக் குழைத்து வைத்ததைத் தின்னுதல் 'கப்புதல்' எனப்பெறும். கப்பி என்பது, தவசமணி நொறுங்கலாகும்.