உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

“கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும், குப்பை கிளைப்போவாக் கோழி"

என்று கூறும் நாலடியார் (341)

CC

“அப்பம் அவலெள் அதிரசமும் தோசையும் கப்புவதும் போச்சே கணிந்து”

53

தனிப்.தத்துவப் பிரகாசர்

41.கரும்புதல் - ஒன்றை ஓர் ஓரத்தில் இருந்து சிறிது சிறிதாகப் பல்லால் கரும்பித் தின்னுதல் கரும்புதலாகும். கரும்பினைத் தின்னும் முறைமை கருதியமைந்த தொழிற் பெயர் கரும்புதல் என்க. காய் கனி முதலியவற்றை எலி தின்னுதலை, 'எலி கரும்புதல்' என்பர்.

42. கறித்தல் - மென்மையான பண்டங்களையும் காய் கறிகளையும் தின்னுதல் கறித்தலாம். காய் கறிகளைத் தின்னுதல் வழியில் கறித்தல் தொழில் பெயர் வந்திருக்கலாம். கறித்தலினும் கடித்தல் என்பது வன்பொருள்களைக் கடித்துத் தின்னுதலாம்.

"இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று'

என்பார் குமரகுருபரர் (மீனாட்பிள்.)விலங்குகள் கதிர், பயறு, குழை, பூ, இலை முதலியவற்றைக் கறித்தலைப் பற்றியே, தொகை நூல்பாடல்கள் குறித்தல் அறியத் தக்கதாம். ஆதலால் மாந்தர் உண்ணுதலைக் குறித்தல் பிற்கால வழக்கென்க. "எயிற்றால் கறித்தான் சில" என அனுமனைச் சுட்டுவார் கம்பர். உயுத்.1836.

43. குடித்தல் - நீர்வகை உணவுகளைப், பொதுவகையாக உட்கொள்ளுதல் குடித்தல் ஆகும். “அந்தீந் தண்ணீர் குடித்தலின்” என்பது குறிஞ்சிப்பாட்டு (211) அண்ணாந்து குடித்தல், கவ்விக் குடித்தல், மண்டியிட்டுக் குடித்தல், அள்ளிக் குடித்தல் எல்லாம் கடித்தல் வகைகளே. பண்டைக் குடிநீர்க் குளமே 'ஊருணி' என்பதையும், பிறவகைகளுக்குப் பயன்படுத்தத் தக்கதாய் ஊர்க்கு அணித்தாய் அமைந்த நீர்நிலையே 'ஊரணி' என்பதையும் எண்ணுக. குடிநீர்வாரியத் துறையையும், மதுக் குடிக் கேட்டையும் கருதின் குடிப்பெருமை சிறுமை ஒருங்கு விளங்கும்.