உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

-

44. குத்துதல் குத்தி எடுத்துத் தின்னுதல் குத்துதலாம். உரலில் குத்துதல் புறஞ்செலல் ஆயினும், முள் குத்துதல் அகஞ்செலல் ஆதல் அறிக.

“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த விடத்து’

99

என்பதில் வரும் குத்துதல் குத்தியெடுத்துத் தின்னுதலாதலை அறிக.

45.குதட்டுதல் - கால்நடைகள் அசைபோட்டு வேண்டியதை உட்கொண்டு வேண்டாதவற்றை வெளியே தள்ளுதல் குதட்டு தலாம். கன்று முதலியன பால்குடித்து வாயுதப்பதலைக் ‘குதட்டுதல்’ என்றும் கூறுவர். (தமிழ்ப் பேரகராதி).

46.குதப்புதல் -எச்சில் தெறிக்கச் சப்புக்கொட்டி மென்று உண்ணல் குதப்புதல் எனப்படும். உதப்புதல் உணவு மிகுதியாக வாயில் இருத்தலால் நிகழ்வது. குதப்புதல் வாய்ச் செய்கை மிகுதியாக நிகழ்வது. இவை, இவற்றின் வேறுபாடு.

47. கொட்டுதல் - மெல்லாமலும் அரைக்காமலும் உணவை அப்படி அப்படியே விழுங்குதலைக் கொட்டுதல் என்பர்."இந்தா இதையும் கொட்டிக்கொள்" என்று பெருந் தீனியர்க்குத் தருவது வழக்கு. 'கொட்டில்' என்பது களஞ்சியத்தைக் குறிக்கும். களஞ்சியத்துக் கொட்டுவது போலக் கொட்டுவது என்னும் குறிப்புடையது இச் சொல்.

48.கொத்துதல் - கொத்தி எடுத்துத் தின்னுதல் கொத்து தலாகும். குத்துதல் கொத்துதல் ஆயிற்று. "கொத்தித்திரியும் அந்தக் கோழி என்றார் பாரதியார். இனிக், களை குத்தியும் களை கொத்தியும் வெவ்வேறாதல் போல் குத்துதலும், கொத்து தலும் வேறுபடுவனவுமாம். கொக்கு மீனைக்குத்தி எடுப்பதற்கும், கோழி புழுவைக் கிண்டிக் கிளைத்துக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு அறிக.

49. கொள்ளுதல் வாங்கிக்கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல்போல உட்கொள்ளுதலும் கொள்ளுதல் எனப் பெறுக. 'உண்டைகொள் மதவேழம்" என்றார் கம்பர். (கடிமணப்.28)

50.கொந்துதல் - பனங்காய் முதலியவற்றை அரிவாளால் வெட் டிக் கொந்திக் குதறி (குறுக்கு மறுக்குமாக வெட்டி)த் தின்னுதல் கொந்துதலாகும். 'அணில் முதலியவை குதறிக் கடித்து