உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

55

உண்ணுதலைக் கொந்துதல்' என்றும் கூறுவா. (பேரகராதி) துன்புறுத்துதல் பொருளில் கொந்துதல் என்னும் சொல் வருதலை நான்மணிக் கடிகை குறிக்கும். "கொந்தி இரும்பிற் பிணிப்பா கயத்தை” என்பது அது (10).

-

51. கொறித்தல் மணி, கொட்டை, தவசம்,பருப்பு முதலியவற்றை அணில் தின்னல் போல் நுனிப் பல்லால் கடித்துத் தின்னல் கொறித்தலாகும். 'குளிருக்குக் கொறி' என்று பயறு, கடலைகளை வறுத்துத் தருவது இன்றும் சிற்றூர் வழக்கமாம். கடித்தலுக்குக் கடைவாய்ப் பல்லும், கொறித்தலுக்கு முன்வாய்ப் பல்லும் பயன்படல் வேறுபாடாம்.

-

52. கோடல் கொள்ளுதல், கோடல், கோள் என்பவை உட்கொள்ளுதலையும் குறிக்கும். உணவு வகையை உட்கொள்ளு தலினும் அறிவு வகைகளை உட்கொள்ளுதலைக் குறித்தே 'கோடல்'ஆளப்பெற்றுள்ளது. கற்றலைக் 'கோடன்மரபு' என்றும், கற்பித்தலைக் 'கொடுத்தல்' என்றும் கூறுவது நூல் வழக்கு. (நன். 40, 36) கற்பவனைக் 'கொல்வேன்' என்பதும் நூல் வழக்கே (நன். 36). பறித்துக் கொள்ளுவதற்கும், உண்ணு வதற்கும் உரிய பக்குவநிலையைக் 'கோட்பதல்' என்பது பண்டை வழக்கு (புறம். 120).

53.சப்புதல்

-

கண்ணமுது தேன் முதலியவற்றைச் சப்புக்கொட்டிச் சுவைத்து உண்ணல் சப்புதலாகும். சப்புச் சப்பெனல் ஒலிக் குறிப்பாகும். சப்பென அறைதல் என்பதில் அவ்வொலிக் குறிப்பறியக் கிடக்கின்றதாம். கன்று தாயின் மடியில் வாய் வைத்துப் பால் இழுத்துக் குடித்தலும் சப்புதலாம், விரலைச் சப்புதல் போல்வதாகலின்.

54.சவட்டுதல் - வெற்றிலை பாக்கு போல்வனவற்றையும் சுவைமிக்க மிட்டாய் வகைகளையும் பல்கால் மென்றும் நாவில் புரட்டியும் சாறு கொள்ளுதல் சவட்டுதலாம். 'களப்போரில் வாட்டுதலைச் சவட்டுதல்' என்னும் பதிற்றுப்பத்து (84). கதிர் அடித்து வைக்கோலைச் சவட்டுதல் உழவர் வழக்கு. அவ்வாறே பல்கால் புரட்டிப் புரட்டி மென்று நைத்தலால், சவட்டுதல் ஆயிற்றாம்.

55. சவைத்தல்

-

பல்கால் மென்று சுவை கொள்ளல், சவைத்தலாம். சவைத்தற்கென்றே 'சவையம்' என ஒன்று (சூயிங்கம்) கடைகளில் விற்பது நாம் அறிந்ததே! 'சவ்வு மிட்டாய், என்பதும் சவைத்தற்கென் றமைந்ததே.'