உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

56.சாப்பிடுதல் - சப்புச் சப்பென வாயொலி எழுமாறு உண்ணுதல் சாப்பிடுதல் ஆகும். சப்பிடுதல், சாப்பீடு -சாப்பாடு என வந்தது. நன்றாகச் சாப்பிடுபவனை அல்லது சாப்பாடே குறியாக இருப்பவனைச் 'சாப்பாட்டு ராமன்' என்பது இக்கால வழக்கு.

-

57. சுவைத்தல் பக்குவநிலை அல்லது சுவைநிலை அறியுமாறு உண்ணல். வேங்காடு, காரம், உப்பு முதலியவை செவ்விதின் அமைந்துளவா என்பதை அறிவதற்கு வேக்காட்டின் போதே சுவைத்துப் பார்த்தல் வழக்கு. இதன் வழியாக, "ஒரு பானை சோற்றுக்கு ஓரவிழ்து பதம்" என்னும் பழமொழி எழுந்தது. சுவை பார்த்தல் சுவைத்தல் என்க. இனி, மழவிளங் குழவி தாயின்மார்பில் பாலுண்ணல் சுவைத்தல் என்பதாம். "சுவைத்தொ றழூஉம் தன்மகத்து முகம் நோக்கி” என்பது புறம் (164). “ஏனது சுவைப்பினும் தேனது வாகும்" என்னும் தொல்காப்பியம் (பொருள்.144) சுவைதரினும் என்னும் பொருட்டது. விழியாக் குருளை மென்முலை சுவைத்தலை சுட்டுவார் பேராசிரியர் (தொல்.மரபு-8)

58. சூப்புதல் எலும்பின் உள்ளீட்டை உறிஞ்சிக் குடித்தலும்; சூப்புப் போல்வனவற்றை இதழ் நெருக்கிக் குடித்தலும் சூப்புதல் ஆகும். சூப்பிப் பருகுதல் சூப்புதல் என்க. சூப்புதற்காக அணியப்படுத்தப்படுபவை 'சூப்பு' எனவே வழங்கப் பெறுதலும் அறிக. சூப்புங்கால் 'சூப்பு சூப்பு' என ஒலி உண்டாதல் கருதி இப்பெயர் எய்தி இருக்கலாம்.

59. சூன்றல் - நுங்கு போல்வனவற்றை விரலால் குடைந்து அல்லது தோண்டித் தின்னல் 'சூன்றல்' ஆகும். சூன்று என்பதற்கு அகழ்ந்து, குடைந்து என்னும் பொருள்கள் உண்மை. "நிழல் சூன்று உண்ட நிரம்பா நீளிடை" என்னும் அகத்தால் (381) புலப்படும்."நுங்கு சூன்றிட்டன்ன" என்பது நாலடி (44)

60. செலுத்துதல் தேய்வை (இரப்பர்)க் குழாய் வழியாகவோ ஊசிவழியாகவோ உணவு மருந்து உயிர்வளி முதலியன உடலின் உட்புகச் செய்தல் செலுத்துதலாம். இறை செலுத்துதல் என்றும் உள்ள வழக்கு. "செலுத்து மட்டும் செலுத்திவிட்டால் சிவனே என்று கிடப்பான்' என்னும் பழமொழி, வேட்கை மீதூர நிரம்ப உண்பதைக் குறிக்கும்.

61. சேர்த்தல் - செலுத்துதல், கொட்டுதல் போன்றது சேர்த்தல்."இது எனக்குச் சேராது,” “இது எனக்கும் சேரும்" என்று

39.66