உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

57

வழங்கும் வழக்கால், சேர்தல், சேர்த்தல் என்பவை உட்கொளல் பொருளில் வருதல் விளங்கும். சேராமையும் ஒவ்வாமையும் Allergy என்பதாம்.

-

62. தருதல் ஈதல், கொடுத்தல் போல்வது, தருதல், பசிவெப்பு அடங்கத் தருவது கொண்டு 'தருதல்' என்பது உட்கொளல் பொருள் தருவது ஆயிற்று. 'தருகை நீண்ட தயரதன்' என்னும் இடத்துத் தருதல் கைச் செயல் ஆயினும், உண்ணுதல் பொருளில் வாய்ச் செயல் ஆயிற்றாம்.

63.தள்ளுதல் -கொட்டுதல் போல்வது; சுவை பாராமல் மெல்லாமல் கொள்ளாமல் வயிற்றுள் தள்ளுதல். "சரக்கு (சாராயம்) நூறு தள்ளு; சரியாகப் போகும்" என்பதில் தள்ளுதல் குடித்தலைக் குறித்தது.

64.தாங்குதல் -தாங்கும் அளவுக்கு அல்லது கொள்ளும் அளவுக்கு உட்கொள்ளுதல் தாங்குதல் ஆகும். மேலும் மேலும் வலியுறுத்தி உண்பிக்கப் பெறும் ஒருவர் 'இனித் தாங்காது' என் ன்று மறுப்பது கொண்டு தாங்குதல் என்பது தாங்கும் அளவு உண்ணுதலைக் குறித்தல் அறியப்பெறும்.

65. திணித்தல் -உண்ணமாட்டாத குழந்தைக்கு வலுக் கட்டாயமாக உணவைக் கொள்ளாத அளவுக்கு உட்செலுத்து தல் திணித்தல் ஆகும். தலையணைக்குப் பஞ்சு திணித்தல் போலத் திணிக்கப் பெறுவது என்னும் பொருளுடையது. திணிதல் செறிவும் நெருக்கமுமாதல் "மண்டிணிந்த நிலனும்" என்னும் புறப்பாட்டால் விளங்கும் (2).

66. தின்னுதல் - சிறு தீனி வகைகளை மென்று தின்பது தின்னுதலாம். இது 'தின்னுகை' என்றும் வழங்கும். "சிதலை தினப்பட்ட ஆலமரத்தைச்' சுட்டும் நாலடியார் (197). “தினற் பொருட்டாற் கொல்லாது" என்று தொடரும் திருக்குறள் (256). தனால் ஊன் முதலியன தின்பதையும் தின்னுதல் குறித்தல் புலனாம்."ஊன்தின்பவர்க்கு" என்பார் வள்ளுவர் (252)

67. திற்றல் - இது, தின்னல் போல்வதே.

"தேனொடு கடமான்பாலும் திற்றிகள் பிறவு நல்கி”

என்னும் கந்தபுராணப் பாட்டு (வள்ளி. 76). திற்றிகள் 'தின்பவைகள்’ எனக் குறித்து வந்தது.

68. தீட்டுதல் நன்றாக வயிறு முட்ட முட்ட உண்ணு தலைத் தீட்டுதல் என்பது நாட்டுப்புற வழக்கு. 'ஒரு தீட்டுத் தீட்டி