உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

விடுவான்' என மிக மிக உண்பவனைச் சுட்டிக் கூறுவர். இடித்து உமிபோக்கிய பின் ஒட்டிய தவிடு போக்குதலைத் தீட்டுதல் என்பது வழக்கு இனித் தீற்றுதல் தீட்டுதலாக வருதலும் கூடும். தீற்றுதல் காண்க.

69. தீற்றுதல் - உண்ணுதல் பொருள் தரும் சொல். "நென்மா வல்சி தீற்றி" (343) என்னும் பெரும்பாணாற்றுப்படை அடிக்கு, 'நெல்லையிடித்த மாவாகிய உணவைத் தின்னப்பண்ணி" எனவரும் நச்சர் உரையால் இப்பொருள் தெளிவாம். 'புற்கற்றை தீற்றி' (புற்கற்றையைத் தின்னச் செய்து) எனவரும் சிந்தாமணி

(3105).

-

70. துய்த்தல் உயிர்வாழ்வுக்குக் கட்டாயமாக வேண்டும் அளவு மெல்லிய உணவு வகைகளைக் கொள்ளுதல். இது துத்தல், து துற்றல் என்றும் வரும். துய்ப்பு 'துப்பு' ஆகியும் உண்ணுதலைக் குறிக்கும். 'துராஅய் துற்றிய துருவை' என்னும் பொருநராற்றுப் படைக்கு (103) "அறுகம் புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறிக்கிடாய்" என்று வரும் நச்சர் உரை துற்றல் பொருளைத் தெரிவிக்கும். 'துப்பார்க்கு' எனவரும் குறளால் 'துப்பு' உண்ணு தலைக் குறித்தல் விளங்கும். துற்று என்பது சிறிதுணவு என்னும் பொருளில் வருதல் 'துற்றுணவு இன்றிச் சோர்வல்' எனவரும் இரட்சணிய யாத்திரீகத்தால் வெளியாம். 'துப்பு கெட்டவன்' என்னும் வழக்கில் வரும் துப்பு 'துய்ப்பு' இன்மையாம் வறுமையைச் சுட்டிவந்ததாம் துய் உணவு. 'நக்கவா துக்கவா' என்னும் இணைச்சொல்லில் 'துக்க' என்பது துய்க்க என்பதாம்.

-

71. துவ்வுதல் துய்த்தல் போல்வது. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் எனவரும் குறளால் துவ்வுதல் உண்ணுதல் பொருட்டதாதல் புலப்படும் (42). 'தான் துவ்வான்' என வருவதும் அது (திருக். 1002).

72. துவைத்தல் - வாய் வைத்துச் சப்பி இழுத்துப் பால் குடித்தல்; தாய்ப்பால் மறவாக்குட்டியைத் 'துவைக்குட்டி என்பதும் 'துவைக்குப் பால்தா' என்பதும் ஆட்டு மந்தையில் கேட்கும் செய்திகள். துவைத்தல் ஒலித்தல் பொருளில் வருதலும் கருதத்தக்கது.

73.தொடுதல் - தலைமை உணவுக்குத் தக்க துணையுணவு கொள்ளுதல் தொடுதல் ஆகும். 'தொடுகறி' என்னும் பெயரும், "தொட்டுக் கொள்ள என்ன இருக்கிறது?" என்னும் வினாவும் தொடுதல் உண்ணுதல் பொருட் குரிமையை விளக்கும். வட்டிலைச்