உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

59

சூழ அமைந்த தொடுகறிக் கலங்களை "நாள்மீன் விராய கோள்மீன்களுக்கு" உவமை காட்டும் சிறுபாண் (242-5).

74.தொலித்தல் - 'அவனை விட்டோம் தொலித்துப் போடுவான்' என்னும் வழக்கால் எவருக்கும் இல்லாமல் முற்றாக உண்ணுதலைத் தொலித்தல் குறிப்பது விளங்கும். தொலைத்தல் அழித்தலாகலின் அச் சொல் தொலித்தலாக மருவியது எனினும் ஆம். தொலித்தல் 'உமிபோக்கல்' என்னும் பொருளில் வழங்கப் பெறும் சொல்.

75.நக்குதல் - தேன், குழம்பு, பாகு முதலியவ்றை நாவால் தொட்டுச் சுவைத்து உட்கொள்வது நக்குதலாம். இது நால்வகை யால் உண்ணுதல் என்பதில் ஒருவகையாம். மற்றவை உண்ணல், பருகல், கடித்தல் என்பனவாம். "நக்கு நாயினும் கடையென்ப புகலும் நான் மறையே" என்பது நாவுக்கரசர் தேவாரம்.

-

76. நுகர்தல் உண்டி முதலியவற்றால் இன்புறுதலும், நன்னெறிப்படர்ந்து விண்ணுலகு புக்கார் இன்புறுதலும் நுகர்ச்சியாம். இந்நாளில் நுகர்பொருள். நுகர்வோர், நுகர் பொருள் அங்காடி என்பன பெருவழக்கின. "தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்" (புறம்.214), "அம்பிகையோடு நுகர்ந்து களித்தனன்' (சிவரக. தேவிமேருகயிலை. 10) என்பவற்றைக் கருதுக.

77.நுங்குதல் - நுங்கு, நொய் நுறுங்கு போல்வனவற்றை நோண்டி அல்லது சுரண்டித் தின்னுதல்.

“நுறுங்குகுற்றுமித்தவிட்டை, நுங்கினான் பசிகள் ஆற

99

என்பது இரட்சணிய யாத்திரீகம். விழுங்குதல் பொருளில் நுங்குதல் வருவதை,

“பாயும் வெம்புகை நுங்கான்" ((சேதுபு. சேதுச, 32)

"இந்தனஞ்சேர் கானகத்தை நுங்கும் எரிபோல்" (பிர. காண். 13; 20) என்பனவற்றைக் காட்டி நிறுவும் தமிழ்ச் சொல்லகராதி.

78. நொறுக்குதல் - நொறுக்கித் தின்னல் நொறுக்கு தலாகும். முறுக்கு சீவல் சேவு முதலியவற்றை நொறுக்கித் தின்பர். வ்வாறு தின்பதை 'நொறுக்குத் தீனி' என்பது வழக்கு. "நொறுங்கத் தின்று நோயகற்று" என்னும் பழமொழி நன்றாக மென்று தின்னுதலைக் குறிப்பதாம்.

79. பசியாறல் - பசித்துக் கிடந்தவன் தன் பசித்தீ ஆறுமாறு உண்ணுதல்.