உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

'ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றேயுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை” (மணி. 11 : 12-14)

“பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக் கெந்நா நிமிராது” (மணி, 80 - 81)

என்பனவும் "பசிப்பிணி மருத்துவன்" பண்ணன் என்று பாராட்டப் பெறுவதும் நோக்கத்தக்கன. 'பசிப்பாழி' என்பது உடலுக்கு ஒருபெயர் என்பதும் அறியத்தக்கது.

80. படைத்தல் - நடுகற்கும் இறையவர்க்கும் இல்லுறை தெய்வத்திற்கும் சோறு முதலியன படைத்து அவிப்பொருளாய் உண்பித்தல். சோறு முதலியவற்றைப் பரிகலம் உண்கலம் முதலியவற்றில் இடுதல் படைத்தலாம். "பந்திக்கு முந்து படைக்குப் பிந்து" என்னும் வீரநிலைப் பழமொழி பிற்றைக் காலத் தமிழர் வீழ்நிலைப் பழமொழியாய் வழங்குவதாம். “படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணல் படைத்தல் வினையை உணர்த்துவது. படைத்தல் உணவு, பல்வகைப்பட்ட பெருஞ் சோற்றுத் திரளை என்பது கருதுக.

81. பதம் - பதம் என்பது சோற்றைக் குறிக்கும். “ஒரு பானை சோற்றுக்கு ஒரு பொறுக்கு பதம்" என்பது பக்குவமான வெந்த சோற்றைக் குறிக்கும். பதம் உண்டல் பொருளில் வருவதைப் பிங்கல நிகண்டு சுட்டும். சோறு என்னும் பொருளைச் சூடாமணி சுட்டும். இவ்விரண்டையும் தமிழ்ச் சொல்லகராதி சுட்டும். சோற்றின் பெயர் சோறு உட் கொளலுக்கு ஆகிவந்ததாகலாம்.

=

82. பருகுதல் ஆர்வ மீதூர நீர் குடித்தல் பருகுதல் ஆகும். விருப்பத்துடன் கற்க வேண்டும் என்பதைப், "பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி” என்று நன்னூல் குறிக்கும். பருகுதல் நால்வகை உண் திறத்தில் ஒன்றாகும். பருகுதல் என்பதற்கு விழுங்குதல் பொருள் உண்மையை நச்சினார்க்கினியர் குறிப்பார் (பொருந.104). "பருகு வன்ன வேட்கை" என்று, காட்சிப் பருகுதலைக் காட்டுவார் பெருஞ்சித்திரனார் (புறம். 207).

83. பிடித்தல் - ஆவி, வேது, புகை முதலியவற்றை உட்கொள்வது பிடித்தல் எனப்பெறும். நிரம்ப உண்ணுதலை "மூக்கு முட்டப் பிடித்தல்" என்பது வழக்கு பிடித்தல் என்பதற்கு உட்கொள்ளுதல், மனத்திற்குப் பிடித்தல் முதலிய பொருள் களைத் தரும் தமிழ்ச் சொல்லகராதி. 'புகை பிடிக்காதீர்' என்று