உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

61

எத்தனை எழுதிப் போட்டாலும், விடாப் பிடியாகப் பிடிப்ப வரைப் பார்க்கிறோம் இல்லையா!

84.புகட்டுதல் - சங்கு கெண்டி முதலியவற்றால் பால் மருந்து முதலியவற்றைப் புகச் செய்தல் புகட்டுதலாம். பாடம் 'புகட்டுதல்' என்பதும் அவ்வாறு உட்செலுத்துதல் வழி வந்ததே. மூங்கில் கொட்டத்தால் மாடுகளுக்கு நீரும் மருந்தும் புகட்டு வதும் உண்டு. தாவந்தி அல்லது தாவரணை பற்றிய மாடுகள் நீரை விரும்பிக் குடியாமையால் இவ்வாறு செய்வர். புகட்டுதல் என்பது போட்டுதலாகத் திரியும்.

66

'அமுதுதன் வாய் செவிதிறந்து புகட்ட" என்பது திருவிளையாடல் (விடையிறு.4).

85.புகுத்துதல் - ஊசி வழியாக மருந்தும் நீருணவும் செலுத்துதல் புகுத்துதலாகும். புகட்டுதல் சங்கு முதலியவற்றால் என்பதும், புகுத்துதல் ஊசி வழியாய் என்பதும் வேற்றுமை.

86. பொறுக்கப் பிடித்தல் -வயிறு முட்ட உண்ணுதல் பொறுக்கப் பிடித்தல் எனப்படும். சிலர் வயிற்றுக்கு வஞ்சகம் கூடாது என்று பொறுக்கப் பிடிப்பர். பொறுக்கப் பிடிப்பார். பொருமித் துன்புறுவதும் உண்டு. இது பொதுக்கப் பிடித்தல், பொதுமப் பிடித்தல் எனவும் வழங்கும்.

87. பொறுக்குதல் -ஒவ்வொன்றாகத் தேர்ந்து பொறுக் கித் தின்னுதல். 'பொறுக்கு மணி' என்பது எண்ணத்தக்கது. விரவல் என்னும் சிற்றுண்டியில் கிடக்கும் கடலைப் பருப்பை விரும்பி முதற்கண் பொறுக்கித் தின்னல் கண்கூடு. புறா, பொறுக்கித் தின்பதை இயல்பாக உடையது.

88. போட்டுதல் -புகட்டுதல் என்பது போட்டுதல் எனத் திரிந்ததாம்.

“பாட்டி அடித்தாளோ பால் போட்டும் கையாலே"

என்னும் தாலாட்டுப் பாட்டு, போட்டுதலைக் காட்டும். போட்டும் என்பது போகவிட்டு என்பதன் மரூஉ என்பர். 'ஒள்ளிகல் அரக்கர் போட்டோடு நாள்' என்பதை அவர் எடுத்துக் காட்டுவர். (தமிழ்ச் சொல்லகராதி.)

89.போடுதல் -போகடுதல் என்பது போடுதலாயதாம். வெற்றிலை பாக்குப் போடுதல், ஊசி போடுதல் என்பவை வழக்கில் உள்ளவை.