உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

-

99. மொசித்தல் 'மொசிதல்' என்பது மொய்த்தல் பொருளில் வருவதுடன் (பதிற். 11) தின்னல் பொருளிலும் வரும் என்பது புறநானூற்றால் விளங்குகிறது. "மையூன் மொசித்த ஒக்கல் என்பது அது (96) "செம்மறியாட்டுத் தசையை தின்ற சுற்றம்" என்பது அதன் பழையவுரை.

போல்வன

100.வாங்குதல் - காற்றுவாங்குதல், மூச்சுவாங்குதல், யானை கவளம்வாங்குதல் வாங்குதலாம். இழுத்தல், ஏற்றுக்கொள்ளல் பொருள், வாங்குதலுக்கு உண்டு எனச் சூடாமணி நிகண்டு சொல்லும்.

101. வாய்க்கிடல் - வாய்க்கிடல் என்பது இறந்தோர் வாய்க்கு அரிசி போடல் என்னும் வழக்கம் பற்றியது. உழையாமல் ஊர்சுற்றித் திரிந்து துன்புறுத்தும் தடிமாக்களைப் பெற்ற தாயும் மனநோவால், 'உனக்கு வாய்க்கரிசி போட வேண்டுமே' என்று சொல்வதில் வாய்க்கிடல் உண்ணுதல் பொருட்டதாம்.

102. விழுங்குதல் -மெல்லாமலும் பற்படாமலும் மருந்து முதலியவற்றைத் தொண்டைக்குள் போட்டு இறக்குதல் விழுங்குதல்; விழுங்குதல் கீழே விழச் செய்தல் போல்வதாம். விழுதல், விழுது முதலியன கருதுக.