உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.ஒருபொருள் பன்மொழி - அழகு

விரும்பா

அழகை விரும்பார் எவர்? அழகராகத் திகழ விரும்பார் எவர்? அழகுக்கு அழகு செய்ய விரும்பும் உலகம் அழகை திருக்குமோ?

அழகின் ஆட்சி எங்கும் உள்ளது! எதிலும் உள்ளது! என்றும் உள்ளது! எவரிடத்தும் உள்ளது!

கலையெல்லாம் அழகு! காட்சியெல்லாம் அழகு! கடவுளும் அழகு! 'எங்கும் அழகு; எதிலும் அழகு' என அழகுள்ளம் அழகை நாடித் தேடுகின்றது. ஆனால், 'அழகு என்பது என்ன?' என வினாவின் அவ்வழகுள்ளம் விடை தருகின்றதோ? விழிக்கின்றது! அழகை எப்படிச் சொல்வது?

C

அழகு அழகானது தான்' என்கிறது.

'அழகு தன்வயப்படுத்த வல்லது' என்கிறது.

"இயற்கை யெலாம் அழகுதான்' என்கிறது. 'செயற்கையில் அழகில்லையா? அதுவும் அழகே'

என்கிறது.

கவர்ச்சி மிக்கவை யெல்லாம் அழகுதான்; காட்சி என்ன! கேள்வியும் அழகில்லையா! சுவை அழகில்லையா! என்கிறது.

கடைசியில், “அழகை எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்? சொல்வார் சொல் எல்லாம் அழகின் ஓர்

ஓரத்தைச் சொல்லுமே அன்றி முழுதாகச் சொல்ல முடியுமோ"

என்று கைவிரிக்கின்றது.

அழகுக்குத்தான் தனித்தமிழில் எத்துணை சொற்கள்?

செங்கதிர் சேயோனையும், கருமுகில் மாயோனையும் ஏந்துபுகழ் வேந்தனையும், கடல் வண்ணனையும் வழிபடு கடவுளாகக் கொண்ட தமிழர் மழையையும் கதிரையும்

-