உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் 36

திங்களையும் வழிபடு கடவுளாகக் கொண்ட தமிழர் - இயற்கை யிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்த தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர் - அழகைப் பற்றிச் சொல்லியதை அறிய வேண்டுமோ?

தமிழர்கண்ட பழமையான பேரிலக்கியத்தின் பெயரோ, 'வனப்பு'; அவர்கள் புதுவதாகப் படைக்கும் இலக்கியத்திற்குத் தந்த பெயரோ, 'விருந்து'; இத்தகையர் அல்லவோ! அவர்கள், அழகியலை - முருகியலைக்-கொஞ்சிக் கொஞ்சி மகிழ்கின்றனர். அவ்வார்வக் கொள்ளையில் புதுப் புதுப் பெயர்களைப் புனைந்து, அழகின் அழகைச் சுட்டுகின்றனர். அவர் சுட்டிய, 'அழகின் இலக்கணம் ஒன்றா? இரண்டா?

ஒருபொருட் பன்மொழியாகப் புனைந்துள்ள சொற்கள் எல்லாமும் தனித்தனி இலக்கணமேயாம். அழகுக்கு மட்டும் அவ்விலக்கணம் இல்லாது ஒழியுமோ?

உயர்ந்த-பரிய-விரிந்த-கவர்ச்சிமிக்க ஒன்றை எப்படி ஒரே சொல்லால் சொல்வது? ஒரே சொல்லால் முழுதுறச் சொல்ல முடியாததைச் சொல்லாமல் விட்டுவிட வளர்ந்தமனம் விட்டு வைக்குமோ? அதற்கு ஒருவழி கண்டது. அஃது, ஒருபொருட் பன்மொழி என்பதேயாம்.

அகன்ற கடலையோ, உயர்ந்த மலையையோ, விரிந்த வானையோ ஒரே பார்வையில் பார்த்துவிட முடிகிறதா? ன்னதே ஒருபொருட் பன்மொழி அமைந்தவகை பற்றிய விளக்கம்.

ஒரு பொருட் பன்மொழி கொண்டு அழகின் இலக்கணங் களாக நாம் அறிவன எவை?

"அழகு ஒழுங்குறுத்தப்பெற்ற அமைப்புடையது;” "உள்ளத்திற்கு விருந்தாக நிறைவு தருவது;"

55

"உணர்வுடைய உள்ளத்தை ஓரொருகால் வருந்தவும்

வைப்பது;”

“புதுமை புதுமையாய்ப் பொலிவுறுத்துவது;” “தாயே போலத் தழைக்கும் இன்பம் தருவது;” "செறிவும் செப்பமும் கொண்டு விளங்குவது; “உள்ளத்தின் எழுச்சிக்கு இடனாக இலங்குவது;