உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“

செந்தமிழ்ச் சொல்வளம்

"புறத்துவனப்பால் உள்ளக்களிப்பும் உள்ளொளியும் விரிய வைப்பது; “ஒப்பிட்டு ஒப்பிட்டு உவகை கூரச் செய்வது;

"புனைந்து இயற்றாப் பொலிவுடையதாய்ப் புனைவனவெல்லாம்

வெல்லவல்லதாய் அமைவது;

“ஒருகால் கண்டாரைப் பல்கால் கவர்ந்து வயப்படுத்தும்

வளமுடையது;

"இளமையும் திரட்சியும் இனிய தோற்றமும் வண்ணமும் வனப்பும் தன்னில் உடையதாய்த் தன்னை விழைந்தார்க்கு ஊட்டுவதாய் அமைந்தது;

"காலத்தால் அழியாக் கட்டமைவும், வளமை குன்றாச் செழுமையும் சீர்மையும் செறிந்தது;

67

தகைமை, தண்மை, இனிமை, இணைமை, கவர்ச்சி, நன்மை, நிறைவு, உட்கோள், பக்குவம், பொலிவு, பசுமை,மலர்ச்சி, வலிமை, ஒளி, ஒலி, மணம், கொடை இன்னவையெல்லாம் தன்னகத்

துடையது.

அழகின், இவ்விலக்கணங்களை யெல்லாம் எவரேனும் அடுக்கி உரைத்தனரோ? ஆம்! ஒருபொருள் பன்மொழியாம் வகையால் உரைத்தனர். பல சொற்களையும் திரட்டி, அவற்றின் அமைதியை ஆயத் தலைப்பட்டார். அவ்வொரு பொருளின் கூறுகள் அனைத்தையும் ஒருங்கே கண்டு களிப்பர். முன்னே சுட்டியது போல், கடலை ஒரே பார்வையால் பார்த்து விடுவார் எவர்? மலையை முற்ற ஒரே நோக்கில் கண்டுவிடுவார் எவர்? வான் மீன்களையெல்லாம் வைத்த ஒரு காட்சியால் கணக்கிடுவார் எவர்? அவ்வாறே, எங்கெங்கு காணினும் எதையெதைக் காணினும் அங்கங்கு அதுவதுவாய் அமைந்து கிடக்கும் அழகையெல்லாம் திரட்டி அதன் இலக்கணத்தைப் 'பன் மொழிகளால்' பகர்ந்த அறிவார்ந்த திறம் இன்பம் பயப்பதாம்! மொழி நலமும் பொருள் வளமும் சேர்ப்பதாம். 'அழகின் சிரிப்பை அள்ளூறி உணர்ந்து திரட்டிய தீம்பாகாய் வழியக் கூவிய புதுவைக் குயில் பாவேந்தர். அவ்வழகின் சிரிப்பை முன்னரே துய்த்து உணர்ந்தோர் படைப்புகள் ஒருபொருள் பன்மொழிகளாம்.

உண்ணுதலும் சாப்பிடுதலும் ஒன்றன்றோ! பருகுதலும் குடித்தலும் ஒன்றன்றோ! அரும்பும் முகையும் ஒன்றன்றோ! குழந்தையும் பிள்ளையும் ஒன்றன்றோ! பொது நோக்கில் இவை ஒன்றாகத் தோன்றினாலும் நுண்ணிய வேறுபாடு உள்ளவை என்பதை அறிவாளர் அறிவர். அவரே, ஒரு பொருள் பன்மொழி விளக்கமும் அறிவர்.