உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

இனி, அழகு சுட்டும் சொற்களை அகர முறையில் விளக்கத் துடனும் எடுத்துக் காட்டுடனும் காணலாம்:

1. அணங்கு : வயப்படுத்தி வருத்துவது. தலைவனும் தலைவியுமாய்க் கூடி இருந்த காலை இன்புறுத்திய இயற்கை நலங்கள் எவையோ அவையெல்லாம் அவர்கள் பிரிவுற்ற காலை பெருவருத்தம் செய்வதை அகத்திணைப் பாலைப் பாடல்கள் வழியே அறிக.

"அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ"

66

"அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே

தீருக்.

-தொல்.

2. அணி: ஒழங்குபட்ட அமைப்புடையது. அணி-வரிசை ; அணிவகுப்பு, அணிதேர் என்பவற்றைக் கருதுக. இருபாலும் முளையடித்து முளைகளில் நெடுங்கயிற்றைக் கட்டி வரிசையாக மாடுகளைக் கட்டி நிறுத்தும் வழக்கத்தால் மாட்டுச் சந்தைக்குத் 'தாம்பணி' என்பது பெயர். தாம்பு-கயிறு; “சிறுதாம்பு தொடுத்த பசலைக்கன்று" என்னும் முல்லைப்பாட்டில் தாம்பு கயிறாதல் அறிக. தாம்பணி, தாமணியாய், தாமணி தாவணியாய்ச் சிதைவுற்று வழங்குதல் அறிக.

3. அந்தம் - (அகம் (அம்) + தம் = அந்தம்)

உள்ளத்திற்கு நிறைவு தருவது அந்தமாம். 'அந்த மாதன வாழ்வோர்' என்பது கம்பரந்தாதி 70. அந்தர் என்பதற்கு உள்ளென்னும் பொருள் உண்மை அறிக.

4. அம் - அமைதியாம் தன்மையால் இன்பம் சேர்ப்பது. அம்மையும் ஐம்மையும், அமைதியும் அழகுமாம். "பரமர் அம்பாலிகைச் செம்பவளக் கொடிபங்கர் - மறைசை 3.

5. அம்மை - தாய்மையில் தழைவது அம்மையாம். இனி அமைதியாம் தன்மையும் அம்மையாம். “அம்மையஞ் சொல்லார்" சிந்தா. முத்தி. 533.

6.அமலம் அமலுதல் நிறைதல் . நீர்நிறை குளமும், மலர்நிறை சோலையும், வனம்நிறை வயலும், உளம்நிறை வாழ்வும் அழகேயாம். 'இருக்கு அமலம் மலர' திருவானைக், கோச் செங்கட்

3.

7. அலரி -விரிவுடையது அலரியாம். ஞாயிற்றின் கதிரை, ‘அலர்கதிர்' என்பர். அரும்பாய் முகையாய் இருந்தவை அலர்வதால்