உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

69

பூவின் பொதுப் பெயர் அலரி ஆயிற்று. மலரை மலர வைப்பது கதிரோன் ஆதலால் கதிரோனும் அலரி எனப்படும். அழகு உறையுள்களுள் மலருக்குத் தனி இடம் உண்டன்றோ! அது, அழகுக்கு அலரிப்பெயர் தந்ததாம்

8. ஆரியம் - (ஆர்+இயம்) கட்டமைந்தது; அருமையானது. இயம் என்னும் ஈறு இலக்கியத்தில் உண்மை, காண்க.

9. எழில் எழு+இல் = எழில். எழுச்சிக்கு இடனாக அமைந்தது. அழகு உள்ளத்திற்கு எழுச்சியூட்டலின் எழில் ஆயிற்றாம். எழிலி என்னும் முகிற்பெயர் எழுதலானும், எழுச்சியூட்டலானும் அமைந்ததாம்.

""

10. ஏர்-ஏர் என்பதும் எழுச்சிப் பொருட்டதே. ஏர் என்பது ஏர்பு என்றுமாம். "வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு' என்றார் நக்கீரர். ஏர் முதன்மைப் பொருளதுமாம். தொழில் களுக்கெல்லாம் முதன்மையான ஏர்த் தொழில், பள்ளிக்கு முற்பட வருபவனை முற்காலத்தில் 'ஏரான்' என்று சொல்லிய வழக்கு ஆகியவற்றைக் கருதி முதன்மைப் பொருள் கொள்ளலாம். "ஏர்ப்பின்னது உலகு" என்று அதன் முன்மையைத் தெரிவித்தார் அல்லரோ பொய்யா மொழியோர்?

17. ஐ - வியப்புக்கு இடமானது. ஐவியப்பாகும் என்றார் தொல்காப்பியர். ஐது, ஐயோ என்பவை வியப்பின் வழி வரும் சொற்களாம்.ஐது அமை நுசுப்பு" என்பது அகம். 75. "ஐயோ இவன் அழகு" என்பது கம்பர்.

=

12. ஒண்மை-ஒளியுடையது. ஒள் (ஒண்) + மை = ஒண்மை. ஒள்ளொளி; பேரொளி. ஒளியில் அழகுண்மை இக்காலச் 'சரமின் விளக்கு'க் காண்பார் அறிவர்.

ஒள் + ஒளி

13.ஒப்பு - ஒன்றைப் போல ஒன்றாக ஒப்பிட்டு அமைக்கப் பெற்றது, ஒப்பத் தோன்றிய உவவனம். காட்சிக்கு ஒப்ப அமைக்கப் பெற்றது ஒவ்வியம்; அஃது ஓவியமானது அறிக. எந்த வேலைப் பாட்டையும் இடப்பாலும் வலப்பாலும் ஒப்ப அமைத்தலும் அறிக.

14.கவின் - கவ்விப்பிடிக்கத் தக்க அழகுடையது கவி, கவின்; உள்ளத்தைக் கவித்து ஈர்த்து நிறுத்த வல்லதாகலின் கவின் எனப் பெற்றதாம். "கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பு" என்பது நக்கீரர் வாக்கு.