உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

15.களை -கள், களி, களை; களிப்புக்கு இட டனாக அமைந்தது. களிப்பொடு திரிவார் இயற்கை அழகராகத் திகழ்தல் ஒருதலை. கவலைக்கோடு உடையார், எத்தகு அழகராயினும் பொலிவற்றுத் தோன்றல் கண்கூடு. இனி, அழகு குறைப்பனவற்றைக் களைந்து, அழகுக்கு உரியவற்றைச் செறித்து வைத்தலால் களையுமாம்.

16.காந்தி-காத்து, காந்தம், காந்தி என்பவற்றைக் கருதுக. காந்தம் ஒளிப்பொருள் ஆவதுடன், கவர்ச்சித் தன்மையுடையது மாதல் தெளிவு. 'சூரிய காந்தி' என்பது கதிரோன் வயமாகி மலர்முகம் காட்டல் கண்கூடு.

17. காமர் - நிறைந்த விருப்புக்கு இடமானது. கமம் நிறைவு ஆகும். காமம் என்பது, கமம் என்னும் நிறைவு மூலத்தின் வழிவந்த சொல்லே. இன்பத்துப்பாலைக் காமத்துப்பால் என வள்ளுவம் வழங்குவதும் அறியத்தக்கது.

18. காரிகை - காரிகை அழகாதல் "கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை” (571) “கண்நிறைந்த காரிகை" (1272) எனக் காரிகையைப் பொருள் விளங்க விரிப்பார் வள்ளுவர். காரிகைப் பெயர் பெண்ணுக்கு ஆதல் அழகு நலம் பண்பு நலம் கருதியதாம்.

-

19. குழகு குழகுக்கு இளமை, குழந்தை, அழகு என்னும் பொருள்கள் உண்டு. மழவும் குழவும் இளமைப் பொருள் என்பார் தொல்காப்பியர். 'குளகு' இளந்தளிராகும். இளமை அழகுக்குரியது என்பது, "கழுதை, குட்டியாக இருக்கும்போது எட்டுப்பங்கு" என்னும் பழமொழி காட்டும். குழகன் அழகன் முருகன் என்க.

20. கேழ் - கேழ் என்பது வண்ணமாம். வண்ணத்தில் அழகு பொதுளி நிற்பதாகலின் அழகு கேழ் எனப் பெற்றதாம்.

21.கொம்மை

கொம்மையாவது திரட்சி. எங்குக் கொழுமையும் வளமையும் திரண்டிருக்கிறதோ, அங்கு அழகும் உண்டாம். கொம்மை மகளிர் மார்பகத்தைக் குறிப்பது. அவர்தம் அழகு நலச் செறிவு ஆங்குண்டையால்,

“கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்”

என்றார் திருவள்ளுவர் (திருக்.1087)