உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

சுற்றும் ஐந்து கூடமொன்று சொல்லி றந்த தோர்வெளி சத்தி யும்சி வனுமாக நின்ற தன்மை ஓர்கிலீர் சத்தி யாவ தும்முடல் தயங்கு சீவ னுட்சிவம் பித்தர் காள்அ றிந்திலீர் பிரான்இ ருந்த கோலமே.

மூலம் என்ற மந்திரம் முளைத்த அஞ்செ முத்துளே நாலு வேதம் நாவுளே நவின்ற ஞான மெய்யுளே ஆலம் உண்ட கண்டனும் அரிசு யனும் ஆதலால் ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்ல தில்லையே

தத்து வங்கள் என்றுநீர் தமைக்க டிந்து போவிர்காள் தத்து வம்சி வமதாகில் தற்ப ரமும் நீரல்லோ முத்தி சீவ னாதமே மூல பாதம் வைத்தபின்

அத்த னாரும் உம்முளே அறிந்து ணர்ந்து கொள்ளுமே.

மூன்று பத்து மூன்றையும் மூன்று சொன்ன மூலனே தோன்று சேர ஞானிகாள் துய்ய பாதம் என்தலை ஏன்று வைத்த வைத்தபின் இயம்பும் அஞ்செ ழுத்தையும் தோன்ற ஓத வல்லிரேல் துய்ய சோதி காணுமே.

85

298

299

300

301

உம்பர் வான கத்தினும் உலக பாரம் ஏழினும்

நம்பர் நாடு தன்னிலும் நாவ லென்ற தீவினும்

செம்பொன் மாடம் மல்குதில்லை அம்ப லத்துள் ஆடுவான் எம்பி ரான லாது தெய்வம் இல்லைஇல்லை இல்லையே. பூவ லாய ஐந்துமாய் புனலில் நின்ற நான்குமாய் தீயிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால்இ ரண்டுமாய் வேயி லாய தொன்றுமாய் வேறு வேறு தன்மையாய் நீய லாமல் நின்றநேர்மை யாவர் காண வல்லரே.

அந்த ரத்தில் ஒன்றுமாய் அசைவு கால்இ ரண்டுமாய் செந்த ழலில் மூன்றுமாய்ச் சிறந்த வப்பு நான்குமாய்

302

303

ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்தி ருந்த நாதனை சிந்தை யில்தெ ளிந்தமாயை யாவர் காண வல்லரே.

304

மனவி காரம் அற்றுநீர் மதித்தி ருக்க வல்லிரேல்

நினைவி லாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்

அனைவர் ஓதும் வேதமும் அகம்பி தற்ற வேணுமேல் கனவு கண்ட துண்மைநீர் தெளிந்த தேசி வாயமே.

305