உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

இட்ட குண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா சுட்ட மண்க லத்திலே சுற்ற நூல்கள் ஏதடா முட்டி நின்ற தூணிலே முளைத்தெ ழுந்த சோதியை பற்றி நின்ற தேதடா பட்ட நாத பட்டரே.

நீரி லேமு ளைத்தெழுந்த தாம ரையின் ஓரிலை நீரி னோடு கூடிநின்றும் நீரி லாத வாறுபோல் பாரி லேமு ளைத்தெழுந்த பண்டி தப்ப ராபரம்

306

பாரி னோடு கூடிநின்ற பண்பு கண்டி ருப்பரே.

307

உறங்கில் என்வி ழிக்கில்என் உணர்வு சென்றொ டுங்கில்என்

சிறந்த ஐம்பு லன்களும் திசைத்தி சைகள் ஒன்றில்என்

புறம்பு முள்ளும் எங்கணும் பொருந்தி ருந்த தேகமாய்

நிறைந்தி ருந்த ஞானிகாள் நினைப்ப தேதும் இல்லையே.

308

ஓது வார்கள் ஓதுகின்ற ஓர்எ ழுத்தும் ஒன்றதே வேதம் என்ற தேகமாய் விளம்பு கின்ற தன்றிது நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே ஏது மன்றி நின்றதொன்றை யான் உணர்ந்த நேர்மையே.

309

பொங்கி யேத ரித்தஅச்சு புண்ட ரீக வெளியிலே

தங்கி யேத ரித்தபோது தாது மாது ளையதாம்

அங்கி யுள்ச ரித்தபோது வடிவு கள்ஒ ளியுமாய்க்

கொம்பு மேல்வ டிவுகொண்டு குருஇ ருந்த கோலமே.

310

மண்ணு ளோரும் விண்ணுளோரும் வந்த வாற தெங்கெனில்

கண்ணி னோடு சோதிபோல் கலந்த நாத விந்துவும்

அண்ண லோடு சத்தியும் அஞ்சு பஞ்ச பூதமும்

பண்ணி னோடு கொடுத்தழிப் பாரொ டேழும் இன்றுமே.

311

ஒடுக்கு கின்ற சோதியும் உந்தி நின்ற ஒருவனும்

நடுத்த லத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே

விடுத்து நின்ற இருவரோடு மெய்யி னோடு பொய்யுமாய்

அடுத்து நின்ற தறிமினோ அனாதி நின்ற ஆதியே.

312

உதித்த மந்தி ரத்தினும் ஒடுங்கும் அக்க ரத்தினும்

மதித்த மண்ட லத்தினும் மறைந்து நின்ற சோதிநீ மதித்த மண்ட லத்துளே மறித்து நீர்இ ருந்தபின் சிரித்த மண்ட லத்துளே சிறந்த தேசி வாயமே.

313