உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

திருத்தி வைத்த சற்குருவைச் சீர்பெ றவ ணங்கிலீர் குருக்கொ டுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ குருக்கொ டுக்கும் பித்தரும் குருக்கொள் வந்த சீடனும் பருத்தி பட்ட பாடுதான் பன்னி ரண்டும் பட்டதே. விழித்த கண்து திக்கவும் விந்து நாத ஓசையும் மேரு வும்க டந்தஅண்ட கோள முங்க டந்துபோய் எழுத்தெ லாம்அ ழிந்துவிட்ட இந்த்ர ஞால வெளியிலே யானும் நீயு மேகலந்த தென்ன தன்மை ஈசனே.

ஓம்ந மோஎன் றும்முளே உபாதை யென்ற றிந்தபின் பானு டல்க ருத்துளே பாவை யென்ற றிந்தபின்

87

314

315

நானும் நீயும் உண்டடா நலங்கு லம்அ துண்டடா

ஊனும் ஊணும் ஒன்றுமே உணர்ந்தி டாய்எ னக்குளே.

316

ஐம்பு லனை வென்றவர்க் கன்ன தானம் ஈவதாய்

நன்பு லன்க ளாகிநின்ற நாத ருக்க தேறுமோ ஐம்பு லனை வென்றிடா தவத்த மேஉ ழன்றிடும்

வம்ப ருக்கும் ஈவதும் கொடுப்ப தும்அ வத்தமே.

317

ஆணி யான ஐம்புலன்கள் அவையும் மொக்குள் ஒக்குமோ

யோனி யில்பி றந்திருந்த துன்ப மிக்கு மொக்குமோ

வீணர் காள்பி தற்றுவீர் மெய்மை யேஉ ணர்திரேல்

ஊண்உ றக்க போகமும் உமக்கெ னக்கும் ஒக்குமே.

ஓடு கின்ற ஐம்புலன் ஒடுங்க அஞ்செ ழுத்துளே நாடு கின்ற நான்மறை நவிலு கின்ற ஞானிகாள் கூடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெ ழுத்துளே ஆடு கின்ற பாவையாய் அமைந்த தேசி வாயமே.

புவன சக்க ரத்துள்ளே பூத நாத வெளியிலே

பொங்கு தீப அங்கியுள் பொதிந்தெ ழுந்த வாயுவைத்

தவன சோமர் இருவரும் தாம்இ யங்கும் வாசலில் தண்டு மாறி ஏறிநின்ற சரச மான வெளியிலே

மவுன அஞ்செ ழுத்திலே வாசி ஏறி மெள்ளவே

வான ளாய்நி றைந்த சோதி மண்ட லம்பு குந்தபின்

அவனும் நானும் மெய்கலந் தனுப வித்த அளவிலே

அவனு முண்டு நானுமில்லை யாரு மில்லை யானதே.

318

319

320