உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம்

-

37

வாளு றையில் வாளடக்கம் வாயு றையில் வாய்வடக்கம் ஆளு றையில் ஆளடக்கம் அருமை என்ன வித்தைகாண் தாளு றையில் தாளடக்கம் தன்மை யான தன்மையும் நாளு றையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே.

வழுத்தி டான்அ ழித்திடான் மாய ரூபம் ஆகிடான்

கழன்றி டான்வெ குண்டிடான் கால கால காலமும்

துவண்டி டான்அ சைந்திடான் தூய தூபம் ஆகிடான் சுவன்றி டான்உ ரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே. ஆகி கூவென் றேஉரைத்த அட்ச ரத்தின் ஆனந்தம் யோகி யோகி என்பர்கோடி உற்ற றிந்து கண்டிடார் பூக மாய்ம னக்குரங்கு பொங்கு மங்கும் இங்குமாய் ஏகம் ஏக மாகவே இருப்பர் கோடி கோடியே.

கோடி கோடி கோடிகோடி குவல யத்தோர் ஆதியை நாடி நாடி நாடிநாடி நாள கன்று வீணதாய்த் தேடித் தேடித் தேடித்தேடித் தேக மும்க சங்கியே கூடிக் கூடிக் கூடிக்கூடி நிற்பர் கோடி கோடியே.

கருத்தி லான்வெ ளுத்திலான் பரன்இ ருந்த காரணம் இருத்தி லான்ஒ ளித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான் ஒருத்தி லான்ம ரித்திலான் ஒழிந்தி டான்அ ழிந்திடான் கருத்திற் கீயும் கூவும் உற்றேன் கண்ட றிந்த ஆதியே.

வாதி வாதி வாதிவாதி வண்ட லைஅ றிந்திடான்

ஊதி ஊதி ஊதிஊதி ஒளிம ழுங்கி உளறுவான்

321

322

323

324

325

வீதி வீதி வீதிவீதி விடைஎ ருப்பு ரக்குவோன்

சாதி சாதி சாதிசாதி சாக ரத்தைக் கண்டிடான்.

326

ஆண்மை ஆண்மை ஆண்மைஆண்மை ஆண்மை கூறும்

காண்மை யான வாதிரூபம் கால கால காலமும்

பாண்மை யாகி மோன மோன பாச மாகி நின்றிடும்

நாண்மை யான நரலைவாயில் நங்கு மிங்கும் அங்குமே.

327

மிங்கு என்ற அட்சரத்தின் மீட்டு வாகிக் கூவுடன் துங்க மாகச் சோமனோடு சோமன் மாறி நின்றிடும் அங்க மாமு னைச்சுழியில் ஆகும் ஏகம் ஆகையால்

கங்கு லற்றுக் கியானமுற்றுக் காணு வாய் சுடரொளி.

328