உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

சுடரெ ழும்பும் சூட்சமும் சுழிமு னையின் சூட்சமும் அடரெ ழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும் திடர தான சூட்சமும் திரியின் வாலை சூட்சமும் கடலெ ழும்பு சூட்சமுங் கண்ட றிந்தோன் ஞானியே.

ஞானி ஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே வானி லாத மழைநானென்ற வாதி கோடி கோடியே தானி லான சாகரத்தின் தன்மை காணா மூடர்கள்

89

329

மூனி லாமல் கோடி கோடி முன்ன றிந்த தென்பரே.

330

சூச்ச மான கொம்பிலே சுழிமு னைச்சு டரிலே

வீச்ச மான வீயிலே விபுலை தங்கும் வாயிலே கூச்ச மான கொம்பிலே குடிஇ ருந்த கோயிலே தீச்ச யான தீவிலே சிறந்த தேசி வாயமே.

பொங்கி நின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும் தங்கி நின்ற மோனமும தயங்கி நின்ற மோனமும் கங்கை யான மோனமும் கதித்து நின்ற மோனமும்

திங்க ளான மோனமும் சிவனி ருந்த மோனமே.

மோன மான வீதியில் முனைச்சு ழியின் வாலையில் பான மான வீதியில் பசைந்த செஞ்சு டரிலே ஞான மான மூலையில் நரலை தங்கும் வாயிலில் ஓன மான செஞ்சுடர் உதித்த தேசி வாயமே.

உதித்தெ ழுந்த வாலையும் உயங்கி நின்ற வாலையும் கதித்தெ ழுந்த வாலையும் காலை யான வாலையும்

.331

332

333

மதித்தெ ழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும்

கொதித்தெ ழுந்து கும்பலாகிக் கூவும் கீயும் ஆனதே.

334

கூவும் கீயும் மோனமாகி கொள்கை யான கொள்கையை

மூவி லேஉ தித்தெழுந்த முச்சு டர்வி ரிவிலே

பூவி லேந ரைகள்போல் பொருந்தி நின்ற பூரணம்

ஆவி ஆவி ஆவிஆவி அன்ப ருள்ளம் உற்றதே.

335

ஆண்மை கூறும் மாந்தரே அருக்க னோடும் வீதியைக் காண்மை யாகக் காண்பிரே கசட றுக்க வல்லிரே

தூண்மை யான வாதிசூட்சம் சோப மாகும் ஆகுமே

நாண்மை யான வாயிலில் நடித்து நின்ற நாதமே.

336