உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம் -37

நாத மான வாயியில் நடித்து நின்ற சாயலில் வேத மான வீதியில் விரிந்த முச்சு டரிலே கீத மான கீயிலே கிளர்ந்து நின்ற கூவிலே பூத மான வாயிலைப் புகல றிவன் ஆதியே.

ஆவி ஆவி ஆவிஆவி ஐந்து கொம்பின் ஆவியே மேவி மேவி மேவிமேவி மேதி னியின் மானிடர்

வாவி வாவி வாவிவாவி வண்டல் கள்அ றிந்திடார் பாவி பாவி பாவிபாவி படியி லுற்ற மாந்தரே.

337

338

வித்தி லேமு ளைத்தசோதி வில்வ ளைவின் மத்தியில் முத்தி லேஒ ளிவதாகி மோன மான தீபமே நத்தி லோதி ரட்சிபோன்ற நாதனைஅ றிந்திடார் வத்தி லேகி டந்துழன்ற வாலை யான சூட்சமே.

339

மாலை யோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே மாலை யோடு காலையான வாற றிந்த மாந்தரே மூலை யான கோணமின் முளைத்தெ ழுந்த செஞ்சுடர் காலை யோடு பானகன்று தங்கி நின்ற மோனமே. மோன மான வீதியில் முடுகி நின்ற நாதமே ஈன மின்றி வேகமான வேகம் என்ன வேகமே கான மான மூலையில் கனிந்தி ருந்த வாலையில் ஞான மான செஞ்சுடர் நடந்த தேசி வாயமே.

உச்சி மத்தி வீதியில் ஒழிந்தி ருந்த சாதியில் பச்சி யுற்ற சோமனும் பரந்து நின்று லாவவே செச்சி யான தீபமே தியான மான மோனமே

340

341

கச்சி யான மோனமே கடந்த தேசி வாயமே.

342

அஞ்சு கொம்பில் நின்ற நாத மாலை போல்எழும்பியே

பிஞ்சி னோடு பூமலர்ந்து பெற்றி யுற்ற சுத்தமே

செஞ்சு டர்உ தித்தபோது தேசி கன்சு ழன்றுடன்

பஞ்ச பூதம் ஆனதே பரந்து நின்ற மோனமே.

சடுதி யான கொம்பிலே தத்து வத்தின் கீயிலே

அடுதி யான ஆவிலே அரன்இ ருந்த கூவிலே

இடுதி என்ற சோலையில் இருந்த முச்சு டரிலே

நடுதி என்று நாதம்ஓடி நன்கு றஅ மைந்ததே.

343

344